இரவில் நகம் வெட்டக் கூடாது என்பது வெறும் மூடநம்பிக்கையா? அறிவியலா?

By Ramya s  |  First Published Sep 15, 2023, 9:09 AM IST

இந்தியாவில் இரவில் நகம் வெட்டக்கூடாது என்ற நடைமுறை காலாங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.


நகங்களை வெட்டுவது ஆரோக்கியமான நடைமுறை. இது நகங்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் உள்ள இடத்தில் அழுக்கு மற்றும் கிருமிகள் சேர்வதைத் தடுக்க உதவுகிறது, மேலும் நகங்களில் அழுக்கு இருந்தால் நாம் உண்ணும் உணவில் கலந்து நோய்களை உண்டாக்குகின்றன. எனவே நகங்களை வெட்டி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இரவில் நகம் வெட்டக்கூடாது என்ற நடைமுறை காலாங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மூடநம்பிக்கையா?

Tap to resize

Latest Videos

ஆனால் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது வெறும் மூட நம்பிக்கையா? அல்லது அதன் பின்னணியில் அறிவியல் காரணம் ஏதேனும் உள்ளது. எந்த உறுதியான அடித்தளமோ அல்லது பகுத்தறிவு விளக்கமோ இல்லை என்றால் அந்த பழக்கம் மூட நம்பிக்கை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் பல மூடநம்பிக்கைகள் உள்ளன. இருப்பினும், மூடநம்பிக்கைகளை நிராகரிக்கிறோம் என்ற பெயரில், நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த பல பயனுள்ள அறிவுரைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, முதலில், இரவில் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வது மூடநம்பிக்கையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அதன் பின்னால் உள்ள அறிவியலை நாம் சிந்திக்க வேண்டும்.

கனவில் சிவன் தொடர்பான 'இந்த' 5 விஷயங்கள் வந்தால்.. இதுதான் அர்த்தம் தெரிஞ்சுக்கோங்க..!!

காரணம்-1

அந்த காலத்தில் மின்சாரம் இல்லை. எனவே இப்போது இருப்பது போல் இரவில் வெளிச்சம் இருக்காது. எனவே இரவில் நகங்களை வெட்டுவதால், கீழே விழும் நகங்கள் அங்கும் இங்கும் விழுந்து அவற்றை சேகரித்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஒருவேளை இருட்டில் சரியாக நகங்களை அப்புறப்படுத்தவில்லை எனில், அவை தெரியாமல் உணவுகள் மற்றும் உண்ணக்கூடிய பொருட்களுடன் கலக்கும்போது சில ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.

காரணம்-2

அந்த காலத்தில் நக வெட்டிக்கள் இல்லை. மக்கள் தங்கள் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இரவில் நகங்களை வெட்டுவதற்கு கத்திகளை பயன்படுத்தினால், காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தது. இரவு நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால், மக்கள் இரவில் நகங்களை வெட்டுவதை ஊக்கப்படுத்தினர்.

காரணம்-3

இதற்குப் பின்னால் மதக் காரணம் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த மதத்தின் படி, மாலை நேரம் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைவார் என்று நம்பப்படுகிறது. வீட்டில் செழிப்பு மற்றும் செல்வத்தை ஆசீர்வதிக்கவும் லட்சுமி தேவி இரவில் வீட்டில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இரவில் வீட்டை கூட்டி பெருக்குவது, குப்பைகளை கொட்டுவது, பணம் கொடுப்பது, கடனை அடைப்பது, நகம் மற்றும் முடி வெட்டுவது போன்ற செயல்களை இரவில் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. பல சிக்கல்கள் ஏற்படலாம்

காரணம்-4

பில்லி, சூனியம் போன்ற தீய செயல்களுக்கு பெரும்பாலும் உடைந்த நகத் துண்டு அல்லது சம்பந்தப்பட்ட நபர் அணியும் சட்டை தேவைப்படுகிறது. எனவே, இரவில் நகங்கள் தரையில் விழுந்தால், தீய சக்திகள் அல்லது நமக்கு எதிராக சூனியம் செய்யும் நபர்கள் நம் நகங்களை சேகரித்து நமக்கு தீங்கு விளைவிப்பதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்பட்டது.

ஆனால் தறோதைய காலக்கட்டத்தில் இரவிலும் மின்சாரம் மற்றும் பிரகாசமான வெளிச்சம் இருப்பதால், இரவில் நகங்களை வெட்டலாமா என்று கேட்டலாம் பிரகாசமான வெளிச்சத்தில் நகங்களை வெட்டலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நகம் வெட்டியை பின், அவற்றை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். எனினும் மத நம்பிக்கை கொண்டவர்கள், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக இருக்க வேண்டுமெனில் இரவில் நகம்  வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

click me!