
ராசிப்படி பெண்களின் தன்மையும், குணநலன்களும்
பெண் என் சக்தி இல்லை என்றால் இந்த பிரபஞ்சமே இல்லை என்றால் அது மிகையல்ல. தாய், மனைவி, சகோதரி தோழி என ஒவ்வொரு கலாகட்டத்திலும் அவர்கள் ஆண்களை வழிநடத்தி செல்கின்றனர். இந்தப் பிரபஞ்சத்தில் பெண்கள் ஒரு குடும்பத்தின் தூணாகவும், சமூகத்தின் இதயமாகவும் திகழ்கிறார்கள். ஒவ்வொரு ராசிக்குமே சில தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன. இவை அவர்களின் வாழ்வியல், சமூகவியல், மற்றும் ஆன்மிக நடத்தை முதலியவற்றில் பிரதிபலிக்கின்றன. இங்கே 12 ராசிகளுக்குமான பெண்களின் தன்மைகள் பற்றி விரிவாக காணலாம்.
மேஷம் (Mesha – Aries)
மேஷ ராசிப்பெண்கள் அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பர். அவர்களின் உற்சாகமுள்ள செயல்பாடுகளும் மற்றவர்களை ஈர்க்க வைக்கும். பெரியவர்களை மதித்து நடந்து, குடும்ப உறவுகளில் ஒழுங்கையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த முயற்சி செய்வார்கள். கணவனை உயிர் காக்கும் அளவுக்கு நேசிப்பவர்கள். உறவுகளில் உணர்ச்சி பூர்வமான நம்பிக்கையுடன் பிணைப்பை உருவாக்குகிறார்கள்.
ரிஷபம் (Rishabha – Taurus)
இவர்கள் அசல் அழகியர்களாகவே உள்ளனர். வசதிக்கேற்ப வாழ்ந்து, கலை மற்றும் கல்வியில் முன்னேற்றம் காண்பவர்கள். ஓவியம், இசை, நாடகம் போன்ற கலைவித்யாசங்களில் ஈடுபாடும், சீரான நுண்ணறிவும் கொண்டவர்கள். இவர்கள் தங்களது சூழ்நிலையை கலைமயமாக மாற்றும் திறனுடையவர்கள். மற்றவர்களுக்கு உதவ முனைப்பும், கருணை மனமும் மேலோங்கும்.
மிதுனம் (Mithuna – Gemini)
மிதுன ராசிப்பெண்கள், பலதரப்பட்ட கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். சிந்தனையாளர், வாதாடலாளர், புத்திசாலி என்ற பல முகங்களில் திகழ்வார்கள். கணவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு துணையாக இருப்பதோடு, அவர்களுக்கு புத்திசாலித்தனமான ஆலோசனையாளராகவும் இருப்பார்கள். குடும்பத்தை மதித்து ஒழுக்கமாக வாழ்வதிலும், மற்றவர்களை கவரும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கடகம் (Kadaga – Cancer)
இந்த ராசிப்பெண்கள் குடும்பம் மற்றும் ஆன்மிக நெறிகளுக்குத் தீவிரமாக இணைந்திருப்பார்கள். சாஸ்திர நெறிகளைக் கடைப்பிடித்து, தங்களது நம்பிக்கைகளை வாழ்வில் கொண்டு வருவார்கள். கணவரின் உணர்வுகளை நன்கு புரிந்து அவர்களுடன் மென்மையாக நடத்தக் கூடியவர்கள். எதிரிகளை சமாளிக்க அறிவும், அனுபவமும் கொண்டவர்கள்.
சிம்மம் (Simha – Leo)
சிம்ம ராசிப் பெண்கள் குடும்பத்தில் முதன்மை பாத்திரம் வகிக்கிறார்கள். இல்லற வாழ்க்கையை நல்லறமாக நடத்தக்கூடியவர்கள். இவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். நேர்மையானது, உறுதியானது மற்றும் நேரடியாக சிந்திக்கும் தன்மை அவர்களை வழிகாட்டியாக மாற்றுகிறது. தங்கள் உரிமைகளை உறுதியோடு பேணக்கூடியவர்களாக இருப்பார்கள்.
கன்னி (Kanni – Virgo)
கன்னி பெண்கள் ஒழுக்கத்தை உயர்வாகக் கருதுகிறார்கள். சுத்தம், ஒழுக்கம், ஒழுங்கு என்பவை இவர்களின் வாழ்க்கையின் மூலக்கொள்கைகள். தாங்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பது இவர்களின் இயல்பு. பண்பட்ட பழக்கவழக்கங்களுடன் ஆன்மிக வழிபாடுகளிலும் ஈடுபாடுடன் இருப்பார்கள்.
துலாம் (Thula – Libra)
இவர்கள் சமநிலை உடையவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பதோடு ஆன்மிக நெறிகளையும் உணர்வோடு பின்பற்றுகிறார்கள். சாந்தச்வபாவம் கொண்டவர்கள். கோபம் போன்ற மனக்கோளாறுகளிலிருந்து தங்களை துறந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகள் மீது அபாரமான பாசமும் அக்கறையும் காட்டுகிறார்கள்.
விருச்சிகம் (Viruchiga – Scorpio)
இவர்கள் கடினமான உட்பக்கம் கொண்டவர்கள் போல் தோன்றினாலும், மனதளவில் மிகுந்த நெகிழ்ச்சி நிறைந்தவர்கள். கடுமையான கண்டிப்பும், கெடுதல் செய்யாத மனநிலையும் கொண்டவர்கள். சிலர் தியானம், யோகம், ஆன்மிக வளர்ச்சி போன்ற துறைகளில் மிகுந்த பரிணாமத்துடன் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
தனுசு (Dhanusu – Sagittarius)
தனுசு ராசிப்பெண்கள் அமைதியானவையாகவும், யாரையும் புண்படுத்தாமல் நடத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். பாசமும் இரக்கமும் நிறைந்த மனதுடன், அனைவரையும் நேசிக்கும் நிலைமை அவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். தான தர்மங்களில் ஈடுபட்டு, சமூக சேவையில் ஒரு பங்கு வகிக்க விரும்புவார்கள்.
மகரம் (Makara – Capricorn)
இந்த ராசிப்பெண்கள் சாதாரண ஆசைகளில் கவலைப்படாமல், உயர்ந்த நோக்கங்களை அடைய விரும்புபவர்கள். கட்டுப்பாடு, பொறுப்பு, பண்பாட்டில் உறுதி கொண்டவர்கள். அவர்கள் சொந்த முயற்சியால் உயர்ந்த அந்தஸ்தை அடைந்து, நல்ல பெயர், மதிப்பு, சமூகத்தில் வலிமையான இடத்தைப் பெறுவார்கள்.
கும்பம் (Kumbha – Aquarius)
இவர்கள் பொதுவாக சமூக நலனுக்காக வாழ்வார்கள். அன்பும் கனிவும் நிறைந்தவர்கள். பிறருக்கு உதவ முனைந்திருப்பார்கள். செல்வத்திலும், அறிவிலும் வளமானவர்கள். தங்கள் சுற்றுச்சூழலிலும் நலத்தை பரப்பும் ஆற்றல் கொண்டவர்கள். எதிர்மறைகளை நேர்மறையாக்கும் சிந்தனை கொண்டவர்கள்.
மீனம் (Meena – Pisces)
மீன ராசிப்பெண்கள் மிகுந்த அன்பும் கண்ணியமும் கொண்டவர்கள். அறநெறியில் நிலைத்து நடப்பவர்கள். தன்னலமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள். தான தர்மங்களை தாராளமாக செய்வதோடு, குடும்பத்தினருக்கும் சமூகத்தினருக்கும் துணை நிற்கக் கூடியவர்கள். பிறரின் வளர்ச்சிக்காக உதவும் பண்பாட்டை மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் இருப்பினும், எல்லா பெண்களும் குடும்பத்தையும் சமூகத்தையும் உற்சாகமாக நடத்தும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்களது நடத்தை, நெறிகள், பாசமும் அர்பணிப்பும் அவர்களை உண்மையான சக்தி என உலகம் அறிந்து கொண்டிருக்கிறது.