Pitru Dosham : பித்ரு தோஷம் என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா? அதற்கான பரிகாரம் இதோ...!!

By Kalai Selvi  |  First Published Aug 22, 2023, 6:21 PM IST

முன்னோர்களை ஒழுங்காக வழிப்படாதோருக்கு தான் பித்ரு தோஷம் ஏற்படும். இந்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டோர் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.


உங்கள் வீட்டில் ஒருவர் இறந்த பின் அவருக்கு நீங்கள் முறைப்படி பித்ரு கடன்களை முறைப்படி செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பித்ரு தோஷம் என்றால் என்ன? 
பித்ரு தோஷம் என்பது பெற்றோரை பிள்ளைகள் இகழ்வது, குறிப்பாக அவர்களை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவது, பணம், சொத்து, பொன், பொருள், என எல்லாவிதமான ஆசை இருப்பது, மேலும் பிறருக்கு தீங்கிழைப்பது, குடும்பத்தில் பிறந்த குழந்தை இறந்து போவது, உற்றார் உறவினர்களோடு பகையோடிருப்பது, கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை இது போன்றவை நடந்தால் உங்கள் குடும்பத்தில் பித்ரு தோஷம் இருப்பது உறுதி என்று கருட புராணம் கூறுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  பித்ரு தோஷம் இருப்பதை எப்படி கண்டறிவது ? பரிகாரம் என்ன?

பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்:

  • உங்கள் வீட்டில் இருக்கும் பித்ரு தோஷத்தைப் போக்க பறவைகளுக்கு தினமும் உணவளிக்க வேண்டும். 
  • ஒவ்வொரு அமாவாசை அன்று வெள்ளைப் பசுவிற்கு பசும்புல் கொடுக்க வேண்டும்.
  • பித்ரு தோஷத்திற்கான நிவாரண பூஜையை ஜோதிடரிடம் முறையாக தெரிந்துக் கொண்டு, தோஷத்தைப் போக்க வேண்டும். பொதுவாகவே காசிக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது உண்டு.

இதையும் படிங்க:  பித்ருதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா.. தோஷம் குறைய இதை செய்யுங்க!

புராணங்கள் கூறிய பரிகாரங்கள்:

  • அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபட வேண்டும். இது பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம் ஆகும். 
  • அதுபோல் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றி, அதை அணையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  • மேலும் தோஷம் நீங்க, ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். இவற்றால் உங்கள் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
click me!