மனிதர்களாகிய நாம் வாழ்கின்ற வீட்டுக்குள் எறும்பு வருவது என்பது சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக உணவுப் பொருட்களோ, இனிப்புகளோ கீழே சிந்தும் பொழுது அதில் உடனடியாக எறும்புகள் மொய்க்க தொடங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இதற்கும் ஆன்மீக ரீதியாக சில பலன்கள் உண்டு என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள், அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வீட்டை பொருத்தவரை கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு என்று இந்த இருவகை எறும்புகள் தான் பெரும்பாலான நேரங்களில் நமது வீட்டிற்குள் வரும். சுவற்றில் வரிசையாக ஏறிக் கொண்டிருக்கும் எறும்புகளை நாம் தினமும் சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் இதிலும் மிகப்பெரிய ஆன்மீகம் ஒளிந்து இருக்கிறது என்றும், இந்த எறும்புகள் நமது வீட்டுக்குள் வரும் திசையை வைத்துக் கூட அதற்கான பலன்களை கூற முடியும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கருப்பு எறும்புகள்
பொதுவாக இவ்வகை எறும்புகள் நாம் கடவுளாக சில சமயங்களில் வணங்குவதும் உண்டு. அது போல தான் வீட்டிற்குள் கருப்பு எறும்பு சுற்றி வந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. அதிக அளவில் இந்த கருப்பு எறும்புகள் வீட்டுக்குள் ஓடி வரும்பொழுது அதிர்ஷ்டம் அந்த வீட்டை தேடி வரப் போகிறது என்றும், அந்த வீட்டினுடைய நிதி நிலை பெரிய அளவில் உயரப்போவதாகவும் இது அறிவிக்கும் ஒரு அறிகுறி என்று கூறப்படுகிறது.
"இந்த' அறிகுறிகள் நடக்குதா? லட்சுமி தேவி விரைவில் உங்கள் வீட்டிற்கு வருவாள் என்று அர்த்தம்..!!
சிவப்பு எறும்புகள்
பொதுவாக சிவப்பு எறும்புகள் வீட்டுக்குள் வருவதை பலரும் விரும்ப மாட்டார்கள், காரணம் அது கடித்தால் ஒரு மெல்லிய வலியும், கொப்பளமும் கடித்த இடத்தில் ஏற்படும். அதேபோல சிவப்பு எறும்புகள் ஆன்மீக ரீதியாக கெட்ட சகுனமாகவே பார்க்கப்படுகிறது. அதிக அளவில் சிவப்பு எறும்புகள் வீட்டுக்குள் நடமாடினாள் அந்த வீட்டில் பண வரவு குறையும் என்றும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் குறையும் என்றும் கருதப்படுகிறது.
அதேபோல மேற்கு திசையில் இருந்து எறும்புகள் வீட்டுக்குள் வந்தால், வீட்டில் உள்ள யாரோ ஒருவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதை அது சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது. அல்லது வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிடும் நபர்களுக்கு அது வெற்றிகரமாக அமையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு திசையில் இருந்து எறும்புகள் வந்தால் அது துஷ்ட செய்தியாக கருதப்படுகிறது வீட்டிற்கு ஏதோ ஒரு கெட்ட செய்தி வரப்போகிறதற்கான அறிகுறி தான் அது என்று கூறப்படுகிறது.
வடக்கு திசையில் இருந்து எலும்புகள் வந்தால் அது மகிழ்ச்சி தரும் செய்திதான் என்றும், உங்கள் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட போகிறது என்றும் கூறப்படுகிறது.
தெற்கு திசையில் இருந்து எறும்புகள் வந்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம் என்றும், மேலும் எறும்புகள் சுவற்றில் கீழிருந்து மேல் நோக்கி சென்றால் உங்கள் வாழ்க்கையும் அதுபோல உச்சத்தை நோக்கி செல்ல போகிறது என்று அர்த்தம் என்றும் கூறப்படுகிறது.