உங்கள் வாழ்க்கை துணை எந்த ஊரிலிருந்து வரப்போறாங்க தெரியுமா? உங்கள் ராசியே அதை தெளிவா சொல்லிடுமாம்! எப்படி?

By Ansgar R  |  First Published Sep 29, 2023, 4:18 PM IST

இரு மனங்கள் ஒன்றாக இணையும் ஒரு நிகழ்வை தான் நாம் திருமணம் என்று அழைக்கின்றோம். பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள், உண்மையில் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ளும் குணம் கொண்ட இருவரின் வாழ்க்கை நிச்சயம் சொர்க்கமாகத் தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


சரி ஒரு ஆணுடைய வாழ்க்கை துணையாக வரப்போகிற பெண் எந்த திசையில் இருந்து வரப்போகிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? என்றால் ஜோதிடம் முடியும் என்று கூறுகிறது. குறிப்பாக உங்கள் ராசியே அதனை காண்பித்து விடும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றார்கள். ஒருவருடைய திருமண வாழ்க்கையை குறிப்பிடக் கூடியது அவருடைய ஜாதகத்தில் உள்ள ஏழாம் வீடு தான். 

இதன் அடிப்படையில் தான் உங்களுக்கு எந்த திசையில் இருந்து துணை அமைவார் என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகத்தின் பலன்கள் உண்டு. ஆகவே ஒருவரின் ஜாதகத்தின் படி ஏழாம் வீட்டில் இருக்கும் அதிபதியின் திசையை கொண்டே அவர்களுக்கு வரப்போகும் துணை இருக்கும் திசை கணிக்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்த இரண்டு ராசிக்கும் ஒருபோதும் செட் ஆகாது...அது உங்க ராசியானு பாருங்களே..!!

கிரகங்களுக்கு உரித்தான திசைகள் என்னென்ன?

கிழக்கு திசைக்கு சூரியன் தான் அதிபதி, அதே போல தென்கிழக்கு பகுதிக்கு சுக்கிரன் தான் அதிபதி, தெற்கிற்கு, செவ்வாய் அதிபதியாக இருக்கும் நிலையில், தென்மேற்கு பகுதிக்கு ராகு அதிபதியாக இருக்கிறார். மேற்கு திசைக்கு சனி அதிபதியாக இருக்கும் பொழுது, வட மேற்கின் திசைக்கு சந்திரன் அதிபதியாக இருக்கிறார். வடக்கு திசைக்கு புதன் அதிபதியாக உள்ளார், மேலும் வடகிழக்கு திசைக்கு குரு அதிபதியாக உள்ளார்.

சரி இனி உங்கள் ராசிக்கு எந்தெந்த திசையில் இருந்து வரன் வந்து அமையலாம் என்பது குறித்து காணலாம்.

மேஷ ராசிக்காரர்களின் ராசி படி அவர்களுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து அவர்களுக்கான வாழ்க்கை துணை அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மேற்கு, வட மேற்கு திசைகளில் இருந்து துணை அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்கிறது ஜோதிடம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு கிழக்கு அல்லது வடகிழக்கிலிருந்து துணைகள் அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளதாம். 

கடக ராசிக்காரர்களுக்கு தெற்கு மற்றும் தென்மேற்கிலிருந்து துணைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளதாம்.

சிம்மராசிக்காரர்களுக்கு மேற்கு மட்டும் வடமேற்கு பகுதிகளில் இருந்து துணை வரை அதிக வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசிக்காரர்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்தும், துலாம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்தும் வரன்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து துணை குறித்த தகவல்கள் வரும். 

தனுசு ராசி காரர்களுக்கு மேற்கு மற்றும் வடகிழக்கு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து துணை குறித்த தகவல்கள் வந்துசேரும். 

கும்ப ராசிக்காரர்களுக்கு தென்கிழக்கு திசையில் இருந்தும் கிழக்கு திசையில் இருந்தும் செய்திகள் வரும் மேலும் மீன ராசிக்காரர்களுக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து சுப தகவல்கள் வரும் என்கிறது ஜோதிடம்.

பித்ரு தோஷம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

click me!