
கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரும். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய வாய்ப்புகள் கைக்குவரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய தொடர்புகள் உருவாகும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வருமானம் கூடும். கை நிறைய பணம் கிடைக்கும்.! வீடு வாங்கும் யோகம்.!
பொருளாதாரம்: பொருளாதார நிலை வலுவாகும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு நல்ல வாரம். நிலம், வீடு தொடர்பான நற்பலன் கிட்டும்.
குடும்பம் & உறவுகள்: குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். தம்பதியர் உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்துடன் ஆனந்தமான நேரம் கழிக்க முடியும்.
காதல் / திருமணம்: காதல் உறவில் அன்பும் அக்கறையும் பெருகும். சிலருக்கு திருமண நிச்சயதார்த்தம் அமையும். உறவில் ஏற்பட்ட பிளவுகள் நீங்கும்.
உடல்நலம்: உடல்நலம் சீராக இருக்கும். மன அழுத்தம் குறையும். யோகா, தியானம் செய்து ஆரோக்கியத்தை பராமரிக்கவும்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பிகை அம்மன் சன்னதியில் ஆர்ச்சனை செய்யுங்கள்.அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை தெய்வம்: அம்பிகை