
பொதுவாக வௌவால்கள் பாழடைந்த வீடுகள்,கோவில்களில் இருக்கக் கூடியவை. இவை வீட்டுக்கு வந்தால் வீடுகள் பாழடையக் கூடும். இவை பழங்கள் அதிகம் கிடைக்கும் பகுதிகளைச் சுற்றித் திரியும். அதுதான் அவற்றின் இரை என்பதால் அங்கேயே இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஆன்மீகம் வௌவால்கள் மரணச் செய்தியைக் கொண்டு வரும் தூதுவர்கள் என்கிறது. இந்த நம்பிக்கை தென் அமெரிக்க பகுதிகளில் கூட காணப்படுகிறது. வௌவால்கள் நம் வீட்டிற்குள் நுழைவது நல்ல சகுனம் இல்லை என பெரியோரும் கருதுகின்றனர்.
வௌவால் வீட்டிற்குள் வந்தால் அது நல்லதா, கெட்டதா என்பதற்கு வெவ்வேறு ஆன்மீக நம்பிக்கைகள் உள்ளன. சிலர் அதை கெட்ட சகுனம் எனக் கூறுகின்றனர். எந்த வீட்டிற்கு பில்லி சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் வைக்கப்பட்டதோ அங்குதான் வௌவால்கள் வருமாம். அந்தக் குடும்பத்திற்கு பெரிய தீங்கு வர வாய்ப்புள்ளதாம்.
வௌவால் உங்கள் வீட்டிற்குள் வந்தால், நேரம் தாமதிக்காமல் அதை உடனே விரட்டிவிடுங்கள். அது குறிப்பிட்ட திசையில் பறந்து செல்வது நல்ல சகுனம். எதிர் திசையில் பறந்து சென்றால் கண்டிப்பாக கெட்ட சகுனம். வௌவால் தலையில் அடிபட்டு வீட்டிற்கு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வரலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால் இன்னொரு ஆன்மீக நம்பிக்கையின்படி, இதை நல்ல அடையாளமாகவும் கருதுகின்றனர். சில நேரங்களில் நல்ல பலன்களையும் தரலாம் என்கின்றனர். இது பிரபஞ்சத்திடமிருந்து வருகிற ஆன்மீக செய்தியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நம் நாட்டின் இந்து வழக்கப்படி, வௌவால் வீட்டுக்குள் வருவது துரதிருஷ்டம். ஆனால் வௌவால்கள் அபரிமிதமான செல்வத்தின் சின்னம் என சீனர்கள் நினைக்கின்றனர். வௌவால் வீட்டுக்குள் வந்து கூடு கட்டினால் அவர்கள் சீக்கிரம் பணக்காரர் ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. இதற்கு மனமும் எண்ணங்களுமே அடிப்படை காரணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதையே தீவிரமாக நம்புங்கள். அதுவே நடக்கும்.