Viruchiga Rasi Palan Dec 13: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும்.!

Published : Dec 12, 2025, 04:37 PM IST
Viruchiga Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 13 Viruchiga Rasi Palan : டிசம்பர் 13, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 13, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் சந்திரன் மற்றும் குருவின் அருளால் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணக்கமான உறவு இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். திருமணம் மற்றும் உறவுகள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

நிதி நிலைமை:

இன்று பண வரவு சீராக இருக்கும். குருவின் பார்வை காரணமாக பண வரவுக்கு எந்த குறைவும் இருக்காது. முதலீடுகளில் இருந்து சிறிய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது அவசியம். வங்கி அல்லது பிற இடங்களில் வாங்கிய கடனில் ஒரு பகுதியை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்னோன்யம் அதிகரிக்கும். துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். உங்கள் மனதில் உள்ள ரகசியங்களை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மன பாரத்தை குறைக்கலாம்.

பரிகாரங்கள்:

இந்து மகாலட்சுமியை வணங்குவது நிதி நிலைமையை மேலும் வலுப்படுத்தும். வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தரும் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு தயிர் சாதம் வழங்குவது சிறப்பான பலன்களைத் தரும். கோவிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Dhanusu Rasi Palan Dec 13: தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.!
Magara Rasi Palan Dec 13: மகர ராசி நேயர்களே, இன்று புது தம்பதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான சுப செய்திகள் கிடைக்கும்.!