Dhanusu Rasi Palan Dec 13: தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.!

Published : Dec 12, 2025, 04:35 PM IST
Dhanusu Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 13 Dhanusu Rasi Palan: டிசம்பர் 13, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 13, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு நல்ல நாளாகும். இன்று நீங்கள் தொடங்கும் அனைத்து காரியமும் நிறைவான வெற்றியைத் தரும். சந்திரனின் நிலை காரணமாக பேச்சிலும், செய்திலும் ஆற்றல் கூடும். வக்ர நிவர்த்தி அடையும் புதன் பகவானின் நிலை காரணமாக தேவையற்ற சலசலப்புகள் ஏற்படலாம். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை.

நிதி நிலைமை:

இன்று எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள். அத்தியாவசியமற்ற செலவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம். எனவே சற்று கவனத்துடன் செயல்படவும். தொழிலில் புதிய திட்டங்களைப் பற்றி சிந்தனைகள் உதயமாகும். இது நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தினருடன் நல்லிணக்கம் காணப்படும். வாழ்க்கைத் துணை அல்லது காதலருடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு வலுப்பெறும். தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க மனம் விட்டு பேசுவது நல்லது. சகோதரர் வழி உறவுகளில் நல்லிணக்கம் கூடும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரங்கள்:

மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சி அம்மனை வழிபடுவது நல்லது. கோயில்களுக்கு விளக்கு ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் அல்லது எண்ணெய் வாங்கி கொடுக்கலாம். ஏழைகள் அல்லது முதியவர்களுக்கு உணவு தானம் வழங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். வீட்டில் தீபம் ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukra Thisai: ஜனவரியில் தொடங்கும் சுக்கிர திசை.! இந்த 5 ராசிகள் வீடு, கார், பங்களான்னு வசதியா வாழப்போறீங்க.!
Mesham to Meenam Jan 02 Daily Rasi Palan: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!