உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போக விநாயகர் சதுர்த்திக்கு பிறகு மஞ்சள் பிள்ளையாரை எப்படி கரைக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று சில வீடுகளில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்வார்கள். எந்த பிள்ளையாருக்கும் இல்லாத மகிமை இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு உண்டு தெரியுமா? அந்த அளவிற்கு சக்தி இந்த மஞ்சள் பிள்ளையாருக்கு உண்டு.
மஞ்சள் பிள்ளையார் எப்போது கரைக்க வேண்டு?
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பிறகு மஞ்சள் பிள்ளையாரை சிலரது வீடுகளில் 3வது அல்லது 5வது நாளில் கரைக்கும் வழக்கம் இருக்கும். இன்னும் சிலரது 9, 11 என அவர்களது வீட்டு பழக்கப்படி கணக்கு வைத்து இருப்பார்கள். எனவே நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கப்படி அவற்றை கரைக்கலாம்.
இதையும் படிங்க: விநாயக சதுர்த்தி 2023 : விநாயகப் பெருமானை பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்..!!
மஞ்சள் பிள்ளையார் வழிபாடு முறை:
விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனை நாள் பிள்ளையாரை வைத்து வழிபாடு செய்வீர்களோ அத்தனை நாளும் காலை வேளையில் மஞ்சள் பிள்ளையாரை புதிதாக செய்ய வேண்டும். மேலும் ஏதாவது ஒரு நெய்வேத்தியமும் கண்டிப்பாக செய்ய வேண்டும். பின் தீப ஆராதனை காட்டி மஞ்சள் பிள்ளையாரை வழிபடவும்.
மஞ்சள் பிள்ளையாரை கரைக்கும் முறை:
இதையும் படிங்க: விநாயக சதுர்த்தி 2023 : விநாயகருக்கு 'இப்படி' அர்ச்சனை செய்யுங்க...உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்..!
மஞ்சு பிள்ளையார் கரைக்கும் மற்றொரு வழி:
மஞ்சள் பிள்ளையாரை கரைக்க நீங்கள் தினமும் வழிபாட்டிற்கு பயன்படுத்திய மஞ்சள் பிள்ளையாரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் எச்சில் படாத ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் தண்ணீர் ஊற்றி, அந்த தண்ணீரில் இரண்டு துளசி இலை, வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பூ, இரண்டு அருகம் புல் ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள். அதன்பின்னர் அந்த பாத்திரத்தில் மஞ்சள் பிள்ளையாரை ஒவ்வொன்றாக கரைக்க வேண்டும். கரைக்கும் முன் நீங்கள் உங்கள் மனதார ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ளுங்கள் அதன் பின்னரே உங்கள் கைகளால் நன்கு கரைக்க வேண்டும். பின் அந்த நீரை உங்கள் வீட்டின் செடிகளில் அல்லது கால் படாத மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடவும். குறிப்பாக, மஞ்சள் பிள்ளையார் உங்கள் வீட்டில் இருக்கும் வரை நீங்கள் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.