இந்த புரட்டாசி மாதம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
வரும் செப்டம்பர் 18-ம் தேதி புரட்டாசி மாதம் பிறக்க உள்ளது. இந்த புரட்டாசி மாதம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இந்த புரட்டாசி மாதம் 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்க உள்ளது. இதனால் விருச்ச்சிக ராசிக்கார்கள் சாதக பலன்களை பெறலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். உங்களின் தலைமைப்பண்பு அதிகரிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்திலும் எந்த சிக்கலும் இருக்காது. ஆரோக்கியம் மேம்பட வாய்ப்புள்ளது. எனினும் அரசியலில் இருப்பவர்கள் கவனமாக பேசுவது நல்லது. இந்த மாதம் உங்கள் தாயின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோபத்தை கைவிட்டு பொறுமையாக இருப்பது நல்லது. பல விஷயங்களில் நண்பர்களின் ஆதரவு இருந்தாலும் அது தொந்தரவாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.. பல சிக்கல்கள் ஏற்படலாம்
எதிரிகளின் தொல்லை குறையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். மொத்தத்தில் இந்த மாதம் நீங்கள் தொட்ட காரியங்கள் கைகூடும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் வருமானம் உயரும். சென்ற மாதத்தில் தடைபட்ட காரியங்கள் இந்த மாதம் நடைபெறும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.. செல்வ நிலை உயரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். உங்களின் பொருளாதார நிலை உயரும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும்.