உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் குணநலன்கள் இதுதானாம்..

Published : Mar 16, 2024, 09:39 AM IST
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் குணநலன்கள் இதுதானாம்..

சுருக்கம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில பொதுவான குணங்கள் இருக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

ஜோதிடத்தின் படி ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்தே அவரின் குணநலன்களை கணித்துவிடலாம். அந்த வகையில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில பொதுவான குணங்கள் இருக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம். பொதுவாக உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசக்கூடியவர்கள். உண்மையே பேசு குணம் கொண்ட இவர்கள் சிறந்த மன வலிமையும் கொண்டிருப்பார்கள். எந்த ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை நேரடியாக பேசக்கூடியவர்கள். 

தாய் மேல் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள், அதே நேரம் கர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்ட இவர்கள் பிறர் செய்த உதவியையும் மறக்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள்.

இவர்கள் பலவித கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சொந்த முயற்சியில் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் அனைத்து காரியங்களையும் உண்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் செய்வார்கள். இயற்கையாகவே கம்பீர நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். ஒருமுறை ஒரு விஷயத்தில் முடிவு செய்துவிட்டால் அந்த முடிவை மாற்ற மாட்டார்கள். 

இவர்களுக்கு அனைவரையும் கவரக்கூடிய பேச்சாற்றல் இருக்கும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். படிப்பவறிவை கொண்ட அனுபவ அறிவு அதிகமாக இருக்கும். சுயமரியாதை அதிகம் கொண்ட இவர்கள், வாழ்க்கையின் முற்பகுதியில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பிற்பகுதியில் வாழ்வின் அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள். 

இவர்களின் திருமண வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

உத்திர நட்சத்திம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், எந்த தீய குணமும் இல்லாதவர்கள். கடுமையாக உழைக்கும் இவர்கள், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரிடம் அதிக அன்புடன் இருப்பார்கள்.

உத்திர நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்தவர்கள், பொன் பொருள் சேகரிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்ட இவர்கள், சில நேரங்களில் கவனக்குறைவால் பொருட்களை இழப்பார்கள். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுத்து பின்னர் வருத்தப்படுவார்கள். இவர்களிம் பொறுமை குறைவாகவே இருக்கும்.

உத்திர நட்சத்திரம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், நேர்மையானவர்களாக இருப்பார்கள். வெற்றிக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் தான் என்ற அகங்காரமும், கர்வமும் அதிகமாக இருக்கும். தனிமையையே அதிகம விரும்புவார்கள்.

உத்திரம் நட்சத்திரம் 4-ம் பாத்தில் பிறந்தவர்கள், கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும். மற்றவர்களை மதிக்கும் குணம் கொண்ட இவர்கள், பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ் தெரிந்தவர்கள். இவர்கள் கல்வி கற்பிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். 

PREV
click me!

Recommended Stories

Thulam Rasi Palan Dec 12: துலாம் ராசி நேயர்களே, இன்று அடிக்கும் ஜாக்பாட்.! இத்தனை பலன்கள் கிடைக்கும்.!
Viruchiga Rasi Palan Dec 12: விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!