ரிஷப ராசி: பொறுமை தரும் வெற்றி, இன்று நடப்பது என்ன.?!

Published : Oct 03, 2025, 07:47 AM IST
Rishaba Rasi

சுருக்கம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று சிந்தனைக்கும் செயலுக்கும் சிறந்த நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் இருந்த தடைகள் அகன்று லாபம் கிடைக்கும்.

சிந்தனைக்கும், செயலுக்கும் சிறந்த நாளாக அமையும்

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பழக்கம் கொண்டுள்ள ரிஷப ராசி நேயர்களே, சூரியனின் தாக்கம் உங்கள் பொறுமையை வலுப்படுத்தி நீண்டகால வெற்றிகளை தரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனைக்கும், செயலுக்கும் சிறந்த நாளாக அமையும். கடந்த சில நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் இன்று குறையக்கூடும். வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். பணியிடத்தில் சாதகமான நிலை ஏற்படும். உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். முதலீடுகளுக்கு சரியான நாள், குறிப்பாக வங்கி அல்லது உணவுத் தொழிலில் முதலீடுகளை அதிகரிக்கலாம்.

நீண்ட நாளாக நிறுத்தி வைத்திருந்த பணிகள் இன்று நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் அகன்று சிறிய லாபம் கிடைக்கும். குடும்ப சூழலில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வாழ்க்கைத்துணை பக்கம் இருந்து அன்பான வார்த்தைகள் கிடைப்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமையை தரும்.

பணவசதியில் சிறிய சிரமங்கள் இருந்தாலும், திட்டமிட்டு செலவுகளை கையாளுவீர்கள். வங்கியில் இருந்த நிலுவை பணிகள் விரைவில் தீர்க்கப்படும். முதலீடு செய்ய விரும்புவோருக்கு இன்று நல்ல நாள். இருப்பினும் அவசரமாக எந்த முடிவும் எடுக்காமல் சிந்தித்துப் செயல்படுங்கள். உணவில் பச்சை இலைகள் மற்றும் பழங்களைச் சேர்த்து, உடலை பலப்படுத்துங்கள். மன அழுத்தம் ஏற்பட்டால், இசை கேட்டு ஓய்வெடுங்கள். உடல் வலிகளை தவிர்க்க ஒழுங்கான உணவு பழக்கத்தையும், ஓய்வையும் கடைப்பிடிக்க வேண்டும். மனதில் நேர்மறை சிந்தனை கொண்டால் தடைகளை எளிதில் சமாளிக்க முடியும். மாணவர்கள் இன்று புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்புகளை பெறுவர். பொதுவாக இன்று உங்கள் பொறுமை உங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும். சவால்களை அமைதியுடன் எதிர்கொள்ளுங்கள். அது உங்கள் வலிமையை வெளிப்படுத்தும். குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள் அது மகிழ்ச்சியைப் பெருக்கும்.

முதலீடு – நிலம் மற்றும் நீண்டகால முதலீடுகள் சாதகம்

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

அதிர்ஷ்ட உடை – கிரீம் கலர் உடை

வழிபட வேண்டிய தெய்வம் – லட்சுமி அம்மன்

அதிர்ஷ்ட எண் – 6

மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செயல்பாடுகளில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம் ஆகியவை காத்திருக்கின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Surya Peyarchi 2026: ஜனவரியில் 3 முறை பாதையை மாற்றும் சூரிய பகவான்.! செல்வ செழிப்பை பெறப்போகும் 5 ராசிகள்.!
Impatient zodiac signs: இந்த 4 ராசிக்காரர்கள் அவசர குடுக்கையா இருப்பாங்களாம்.! கொஞ்சம் கூட பொறுமை இருக்காதாம்.!