Today Rasipalan October 03: மேஷ ராசி நேயர்களே, இன்று வெற்றி உங்களைத் தேடி வரும் மர்மம் என்ன தெரியுமா.?!

Published : Oct 03, 2025, 07:16 AM IST
mesha rasi

சுருக்கம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று ஒரு உற்சாகமான நாள். தொழில், காதல், மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்களைத் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் இது சாதகமான நேரம், நேர்மறை சிந்தனையுடன் சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

புதிய திட்டங்களை தொடங்க நல்ல நாள்

இலக்கை நிரணயம் செய்து அதனைபடி நடக்கும் மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்.சூரியனின் சக்தி உங்கள் தலைமைத்துவத்தை வலுப்படுத்தி, புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். பணியிடத்தில்  உங்கள் யோசனைகள் அனைவரையும் கவரும். அலுவலக ஆலோசனை கூட்டத்தில் உங்கள் பேச்சு வெற்றியைத் தரும்.

புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு இன்று சரியான நேரம்.  அவசரத்தில் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூத்த அதிகாரி உங்களுக்கு உதவலாம். அதேபோல் காதல் வாழ்க்கையில் இனிமை நிறைந்த நாள். தம்பதியருக்கு சிறிய சர்ச்சைகள் ஏற்படலாம். பால்ய நண்பரை சந்திங்கும் நிலை ஏற்படும். அந்த சந்திப்பு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

உணர்ச்சிகளைத் திறந்து வெளிப்படுத்துங்கள், அது உங்களுக்கு நல்ல பலன் தரும். நிதி விஷயங்களில் நிலையான முன்னேற்றம் காணப்படும். ஒரு எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.முதலீடுகளுக்கு சாதகமான நாள், குறிப்பாக தொழில்நுட்பம் அல்லது சொத்துக்களில் முலீடு செய்யதால் ஆதாயம் கிடைக்கும். 

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.  யோகா அல்லது வாங்கிங் மனதை உற்சாகப்படுத்தும். பொதுவாக, இன்று உங்கள் தைரியம் உங்களை வெற்றியின் உச்சிக்கே  கொண்டு செல்லும். சவால்களை வாய்ப்புகளாகப் பாருங்கள்.  நேர்மறை சிந்தனை உங்கள் ராசியைப் பிரகாசப்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுங்கள் ,அது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பின் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  சிறிய புரிதல் குறைகள் விரைவில் சரியாகும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். பணவசதி நிலையாக இருக்கும் ஆனால் திடீர் செலவுகள் அதிகரிக்கலாம். உடல் சோர்வை தவிர்க்க ஓய்வு அவசியம். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

முதலீடு – நீண்டகாலத்திற்கு சாதகம் 

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு 

அதிர்ஷ்ட உடை – வெள்ளை சட்டை 

வழிபட வேண்டிய தெய்வம் – முருகன் 

அதிர்ஷ்ட எண் – 9

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thulam Rasi Palan Dec 13: துலாம் ராசி நேயர்களே, இன்று வாயில் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Viruchiga Rasi Palan Dec 13: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும்.!