Sept 30 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று எந்த பக்கம் திரும்பினாலும் ஆபத்து தான்.! பொறுமையா இருங்க.!

Published : Sep 29, 2025, 04:37 PM IST
thulam rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan : செப்டம்பர் 30, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

இன்று எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுங்கள். முழுமையான தெளிவு கிடைக்கும் வரை காத்திருங்கள். தொழில் இலக்குகள் மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்து ஆழமாக சிந்தித்து சுய பரிசோதனை செய்து கொள்ள இது ஒரு நல்ல நாளாகும். உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கிடையே சமநிலையை உருவாக்குங்கள். எந்த முடிவை எடுத்தாலும் நிதானமாக புதிய வழிகளை கண்டுபிடித்து அதன்படி செயல்படுங்கள்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் நிதி நிலைமை சீராக இருக்கும். நீண்ட கால வளர்ச்சிக்கு வழி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்ய வாய்ப்புகள் கிடைத்தாலும், ரிஸ்க் எடுக்காமல் நம்பகமான வழிகளில் முதலீடு செய்யுங்கள். வரவு திருப்திகரமாக இருந்தாலும், குடும்பத் தேவைகள் மற்றும் வீட்டு செலவுகள் காரணமாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை பெருக்கத் துவங்குங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உறவுகளில் அன்பும், அரவணைப்பும் காணப்படும். உங்கள் பிணைப்பு வலுப்படும். துணையுடன் சில சமயங்களில் பிடிவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பொறுமையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் கையாள வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக சகோதரர்கள் மற்றும் பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது மன மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிர பகவானின் தெய்வமான மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள்.
  • சுக்கிரனுக்கு வெள்ளை மலர்கள் சாற்றி வழிபடலாம். இது செல்வம், அன்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கூட்டும்.
  • ஏழை எளியவர்களுக்கு தயிர்சாதம் அல்லது வெள்ளை நிற பொருட்களை தானமாக கொடுப்பது சிறந்தது.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: மீன ராசிக்கு கிடைக்கப்போகும் பம்பர் பரிசு.! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கப்போறீங்க.!
This Week Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, எல்லா பிரச்சனைக்கும் இந்த வாரம் எண்டு கார்டு.! அடிக்கப்போகும் ஜாக்பாட்.!