Sept 30 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வாயில் தான் சனி.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!

Published : Sep 29, 2025, 04:28 PM IST
dhanusu rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan : செப்டம்பர் 30, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் குறைவாக பேசவும், அதிகமாக சிந்திக்கவும் வேண்டிய நாளாகும். உங்கள் வார்த்தைகளில் தெளிவும் ஆழமும் இருக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. நிதானத்துடன் செயல்படுவது சிறந்தது. கேள்விகள் கேட்பதற்கோ அல்லது சரியான நேரத்தில் ஆலோசனை பெறுவதற்கோ தயங்க வேண்டாம்.

நிதி நிலைமை:

பணம் சார்ந்த விஷயங்களில் அதிக விவாதம் செய்வதையோ அல்லது கவலைப்படுவதையோ தவிர்க்கவும். சிக்கலான வியூகங்களை விட எளிய பட்ஜெட்டை போட்டு அதை பின்பற்றுங்கள். புதிய முதலீடுகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் உங்களின் நிதி நிலைமையை யோசித்து விட்டு பின்னர் முடிவெடுங்கள். தேவையில்லாத செலவை குறைப்பதன் மூலம் நிதி நிலைமையில் சமநிலையை உணரலாம்

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகளில் அதிகம் பேசுவதை குறைத்து, செயல்பாடு மூலம் அன்பையும் அக்கறையும் வெளிப்படுத்துவீர்கள். இதன் காரணமாக உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். தவறான புரிதல்களை தவிர்க்க மனம் விட்டு பேசுவது நல்லது. பாராட்டுகளைப் பெறுவதற்காகவோ அல்லது உங்களை நிரூபிப்பதற்காகவோ அதிக சுமையை ஏற்றுக் கொள்ளாதீர்கள். எளிமையுடன் இருங்கள்.

பரிகாரங்கள்:

  • இன்று துர்க்கை அம்மனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
  • துர்க்கை அம்மனுக்கு அரளிப்பூ மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  • கோயில்களின் வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள்.
  • மூச்சுப் பயிற்சி தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றைய ராசி பலன் - Today Rasi Palan: இன்று லாபமா? நஷ்டமா? 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
This Week Rasi Palan: மீன ராசிக்கு கிடைக்கப்போகும் பம்பர் பரிசு.! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கப்போறீங்க.!