Sept 30 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் பொன்னான நாள்.!

Published : Sep 29, 2025, 04:21 PM IST
kumba rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan : செப்டம்பர் 30, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்று புதிய தொடக்கத்திற்கான நாளாக இருக்கும். கடந்த காலங்களில் நடந்தவற்றை திரும்பி பார்க்காமல் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்கள் மனம் அமைதியாகவும், புதிய ஆற்றலுடனும் செயல்படும். இது புதிய காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபட உதவும். அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்கவும். பொறுமையாக சிந்தித்து செயல்பட்டால் நல்ல தெளிவு பிறக்கும்.

நிதி நிலைமை:

நிதி விவகாரங்களில் பழைய தவறுகளை நினைத்து வருந்தாமல் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலைமை சீராகவும் வளர்ச்சிக்கு ஏற்ற பாதையிலும் இருக்கும். புதிய பழக்கங்கள் நிதி ஸ்திரத்தன்மையைக் கூட்டும். நம்பகமான திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி யோசிக்கலாம். அவசரப்பட்டு அதிக லாபம் தரும் திட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் நிதி நிலைமை சீராக இருந்தாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கடந்த கால மனக்கசப்புகளை மறந்து விட்டுக் கொடுத்து உறவுகளிடம் இணக்கத்தை காட்டுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பாசத்தை வெளிப்படுத்துவதற்கு நல்ல நேரம். உள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனதிற்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். புதிதாக நட்பு உருவாக அல்லது ஏற்கனவே இருக்கும் உறவு பலப்படுவதற்கான நல்ல நாளாகும்.

பரிகாரங்கள்:

  • இன்று ஏற்படும் காரியத் தடைகள் நீங்க விநாயகப் பெருமானை வழிபடுங்கள். 
  • விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். 
  • மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். 
  • ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்றைய ராசி பலன் - Today Rasi Palan: இன்று லாபமா? நஷ்டமா? 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
This Week Rasi Palan: மீன ராசிக்கு கிடைக்கப்போகும் பம்பர் பரிசு.! இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கப்போறீங்க.!