Oct 11 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று கடன்களை அடைப்பீர்கள்.! பல வழிகளில் செல்வம் குவியும்.!

Published : Oct 10, 2025, 05:17 PM IST
thulam rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • துலாம் ராசி நேயர்களே, இன்று புதிய முயற்சிகளில் இறங்கவோ அல்லது ஆரம்பிக்கவோ நல்ல நாளாகும்.
  • நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளது. 
  • உறவினர்கள் நண்பர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கி, இணக்கமான சூழல் நிலவும். 
  • முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்த காரியங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். 
  • சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை.

நிதி நிலைமை:

  • பண வரவு இன்று சீராக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • திடீர் செலவுகளையும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தலாம். 
  • பழைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். 
  • ஆபத்தான அல்லது அவசர முதலீடுகளை தவிர்த்து நீண்ட கால திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்னோன்யம் அதிகரிக்கும். 
  • மனதில் உள்ள விஷயங்களை பொறுமையுடன் பேசுங்கள். 
  • இது உறவை மேலும் வலுப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 
  • குடும்ப உறுப்பினர்கள் உங்களை உற்சாகமாக வைத்திருப்பார்கள். 
  • பேசும்பொழுது வார்த்தைகளில் நிதானம் தேவை. 
  • கலைத்துறையில் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரங்கள்:

  • இன்றைய தினம் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அவரது அருளை பெற சனி பகவானை வணங்குவது நல்லது. 
  • சனிக்கிழமை என்பதால் சனிபகவான் ஆலயங்களில் எள் தீபம் ஏற்றி வழிபடலாம். 
  • சிவபெருமானை வழிபடுவது தடைகளை நீக்க உதவும். 
  • ஏழைகள், தேவைப்படுபவர்கள், முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். 
  • அன்னதானம் வழங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!