Oct 11 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்னைக்கு பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.!

Published : Oct 10, 2025, 05:08 PM IST
Dhanusu Rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 11, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். 
  • அன்றாடப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரலாம். 
  • ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருங்கள். 
  • அஜீரணம், தொண்டை அல்லது காது சம்பந்தமான சிறு உபாதைகள் ஏற்படலாம். 
  • வேலைகளில் குழப்பம் அல்லது மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
  • எனவே பணியிடத்தில் கவனத்துடன் இருங்கள். பு
  • திய யோசனைகள் அல்லது தகவல்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • புதிய விஷயங்களை கற்க ஆர்வம் காட்டுவீர்கள்.

நிதி நிலைமை:

  • நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். 
  • எதிர்பாராத பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 
  • உடல்நலம் அல்லது அவசரத் தேவைகளுக்காக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். 
  • நீண்டகால முதலீடுகளைத் தவிர்த்து சிறிய சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள். 
  • பணம் சார்ந்த விஷயங்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் நிதானமாக செயல்படுவது நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • உறவுகளில் அன்பும், ஆதரவும் மேலோங்கும். 
  • புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். இதன் மூலமாக மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். 
  • திருமணமானவர்களுக்கு துணையுடன் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும். 
  • இதன் காரணமாக அன்னோன்யம் அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். 
  • உடன்பிறந்தவர்களின் ஆதரவு மன நிம்மதியைத் தரும்.

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசியின் அதிபதியான குரு பகவானை வழிபடுவது நன்மை பயக்கும். 
  • சனிக்கிழமை என்பதால் விஷ்ணு அல்லது மகாலட்சுமி தாயாரை வணங்கலாம். 
  • சவால்களை சமாளிக்க துர்க்கை அம்மனை வணங்கலாம். 
  • வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த பாலை பசுவிற்கு வழங்குவது பலன்களை அதிகரிக்கும். 
  • ஏழை, எளியவர்கள், வறியவர்களுக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukra Thisai: ஜனவரியில் தொடங்கும் சுக்கிர திசை.! இந்த 5 ராசிகள் வீடு, கார், பங்களான்னு வசதியா வாழப்போறீங்க.!
Mesham to Meenam Jan 02 Daily Rasi Palan: இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!