சுக்கிரன் பெயர்ச்சி 2024 : கடகத்தில் பயணிக்கும் காதல் நாயகன்.. 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம்!!

Published : Jul 10, 2024, 09:06 AM ISTUpdated : Sep 28, 2024, 01:00 PM IST
சுக்கிரன் பெயர்ச்சி 2024 : கடகத்தில் பயணிக்கும் காதல் நாயகன்.. 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம்!!

சுருக்கம்

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு கடந்த ஏழாம் தேதி இடப்பெயர்ச்சியாகியுள்ளார். சுக்கிரனின் இடப்பெயர்ச்சியும் பார்வையும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதுவித மாற்றத்தை ஏற்படுத்தும். 

சுக்கிரன் பெயர்ச்சி பலன்: மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருந்தால் நினைப்பது நடக்கும். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் ஏற்படும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் லாபம் என்று பார்க்கலாம். 

மேஷம்: சுக ஸ்தானமான 4வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.  நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு பால் வாங்கி அபிஷேக பூஜைக்கு கொடுக்கலாம். 

மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில்  பயணம் செய்வதால் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான காதல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு வெண்ணெய் வாங்கி கொடுத்து வழிபடலாம். இதனால், நன்மைகள் நடைபெறும்.

குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

கடகம்: நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும். தங்க நகைகள் வாங்கலாம். வாரம் ஒருநாள் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை, முல்லை வாங்கிக் கொடுத்தால் நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி: சுக்கிரன் 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால்  பண வரவு அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும். வாகன வசதி மேம்பட்டு, திருமணம் கைகூடி, சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில்  தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வதால் தொழிலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம்.  வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது அமைதியாகவும் நிதானமாகவும் பேச வேண்டும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தவறுதலாக கூட இதுபோன்ற செயல்களை செய்யாதீங்க..! மீறினால் அவ்ளோதான்..!!
 

தனுசு: சுக்கிரன்  எட்டாவது வீட்டில் மறைவதால்  விலை உயர்ந்த பொருள், நகை, பணத்தை பத்திரப்படுத்தவும். விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் கொடுக்கலாம்.

கும்பம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, மன அழுத்தம் ஏற்படலாம். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளித்தால் நன்மை பெருகும். 

மீனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால்  வருமானம் அதிகரித்து, கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வர நன்மைகள் ஏற்படும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!