எனவே சனியின் இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று விரிவாக பார்க்கலாம்.
9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். கடந்த ஜூன் 17-ம் தேதி கும்பராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் நிலையில் நவம்பர் 4-ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே சனியின் இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு, சனியின் தற்போதைய பிற்போக்கு நிலை சாதகமாக உள்ளது. ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது, தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒட்டுமொத்தமாக இது சிறப்பான காலம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டில் இருந்தும் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் பண ஆதாயம் உண்டாகும். இந்த காலக்கட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
துலாம் :
சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்கள்கரமானதாக கருதப்படுகிறது. எனவே நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்ததிருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பண ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்த வெற்றியை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த சூழல் இருக்கும்.
விருச்சிகம்
இந்த நேரத்தில் விருச்சிகராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வராது என்ற நிலையில், அந்த பணமும் வரம். தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் கிடைக்கும். திருமண யோகமும் கைகூடும். மொத்தத்தில் இந்த காலம் அமோகமான காலமாக இருக்கும்.
எந்த கடவுளுக்கு எந்த பூ உகந்தது தெரியுமா? அவர்களுக்குரிய பூக்களை படைங்க..நன்மைகள் பல.!!
கும்பம் :
சனியின் வக்ர நிவர்த்தி காலத்தில் சனிபகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நற்பலன்களையே வழங்குவார். நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையும் போது கும்ப ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடரும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.தொழில் முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கலாம்.