Oct 13 to 19 This Week Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கப்போகும் பம்பர் பரிசு.! இனிமே உங்களுக்கு நல்ல காலம் தான்.!

Published : Oct 12, 2025, 05:26 PM IST
thulam rasi

சுருக்கம்

This Week Rasi Palan: அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரவுள்ளது. 
  • இந்த வாரம் உங்கள் இயல்பான சமநிலை மற்றும் நியாயமான அணுகுமுறை பல விஷயங்களில் வெற்றியைத் தேடித் தரும். 
  • மனதில் தெளிவு மற்றும் பொறுமையுடன் செயல்படுவது முக்கியமான முடிவுகளில் நல்ல பலன்களைத் தரும். 
  • ஒன்பதாவது வீட்டில் குரு இருப்பதால், பொதுவாக மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

ஆரோக்கியம்:

  • ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும். 
  • நாள்பட்ட நோய்களில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. 
  • வேலைப் பளு அல்லது தொழில்முறை சவால்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். 
  • மன அழுத்தத்தை நிர்வகிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லது. 
  • நேரம் தவறி உண்பது, நேரம் தவறி தூங்குவது போன்றவற்றைத் தவிர்த்து, சரியான நேர அட்டவணையைக் கடைப்பிடிப்பது நல்லது.

நிதி நிலைமை:

  • எதிர்பாராத செலவுகள் சில நிதி சிக்கல்களை உருவாக்கலாம். 
  • எனவே, பணத்தை கவனமாக செலவிடுவதும், சேமிப்பில் கவனம் செலுத்துவதும் அவசியம். 
  • உங்கள் வங்கி இருப்பு குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. 
  • அதிக செலவு செய்திருந்தால் சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். 
  • அன்றாடக் கூலி பெறுபவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
  • முதலீடுகள் மூலம் பெரிய லாபத்தைப் பெற வாய்ப்பு உண்டு. 
  • அதை வீண் செலவு செய்யாமல் சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

கல்வி:

  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். 
  • பள்ளி மற்றும் இளங்கலை மாணவர்கள் சிறப்பாக முன்னேறுவார்கள். 
  • ஆனால் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கவனச்சிதறல்கள், மன அழுத்தம் போன்ற சவால்களைச் சந்திக்க நேரிடலாம். 
  • முழு அர்ப்பணிப்புடன் படிப்பில் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். 
  • கடினமான பாடங்களைப் புரிந்துகொள்வதில் வெற்றி பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

  • பணியிடத்தில் மற்றவர்களை விட பணிகளை முடிக்க விரும்புவீர்கள். 
  • போட்டி மனப்பான்மை அதிகமாகக் காணப்படும். 
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். 
  • அலுவலக பணிகளை கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. உங்கள் முயற்சிகள் மற்றவர்களால் பாராட்டப்படும். 
  • புதிய திட்டங்கள் அல்லது பொறுப்புகளை ஏற்க சரியான நேரமாகும். 
  • முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படாமல், அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் நல்ல முறையில் செயல்படுவார்கள். 
  • வங்கி ஊழியர்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.

குடும்ப உறவுகள்:

  • காதல் மற்றும் குடும்ப உறவுகளில் திருப்தி அதிகரிக்கும். 
  • உறவுகள் நிலையானதாகவும், உற்சாகமாகவும் இருக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லவும் வாய்ப்புள்ளது. 
  • இது குடும்ப அமைதி மற்றும் சகோதரத்துவத்தை அதிகரிக்கும். 
  • வெளிப்படையான மற்றும் நேர்மையான உரையாடல்கள் மூலம் குடும்பத்தில் உள்ள தவறான புரிதல்களை நீக்க முடியும். 
  • குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சில சம்பவங்கள் நடக்கலாம். 
  • நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாகப் பேசுவதும் பழகுவதும் நல்லது.

பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமைகளில் உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிர பகவானை வழிபடுவது நன்மை பயக்கும். 
  • ஸ்ரீ மஹா லக்ஷ்மிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும். 
  • பைரவரை வழிபடுவது அதிர்ஷ்டத்தைக் கூட்டும். 
  • இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நன்மைகளைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜயோகம்.! 2026-ல் அளவில்லாத நன்மைகளைப் பெறவுள்ள ராசிகள்.!
இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் பாறை போன்ற மனம் கொண்டவர்கள்.! இவங்கள அசைத்து பார்க்கவே முடியாதாம்.!