Oct 13 to 19 This Week Rasi Palan: மகர ராசி நேயர்களே, இந்த வாரம் சொத்துக்கள் கிடைக்குமாம்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!

Published : Oct 12, 2025, 04:41 PM IST
magara rasi

சுருக்கம்

This Week Rasi Palan: அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • மகர ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் சீரான முன்னேற்றம், தெளிவு மற்றும் தனிப்பட்ட முறையில் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கலாம். 
  • சிறிய இலக்குகளை அமைத்து, நிதானமாக செயல்பட்டு, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 
  • வாரத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு தெளிவு பிறக்கும். இது முக்கியமான முடிவுகளை எடுக்க உதவும். 
  • உங்களின் தன்னம்பிக்கை உயரும். இதன் காரணமாக தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். 
  • அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். 
  • அவசரம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதை தவிர்த்து நிதானமாக செயல்படுவது சிறந்த பலன்களைத் தரும்.

ஆரோக்கியம்:

  • இந்த வாரம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் ரீதியாக சோர்வடைய வாய்ப்பு உள்ளது. 
  • எனவே உடல் நலனில் அதிக கவனம் தேவை. போதுமான ஓய்வு மற்றும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
  • சமச்சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்றுவது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும். 
  • பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படக்கூடும். 
  • எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

நிதி நிலைமை:

  • உங்கள் வருமானம் மற்றும் செலவு பழக்கங்கள் சாதாரணமாக இருக்கும். 
  • எதிர்பாராத விதமாக குடும்ப சொத்து அல்லது நிலம் மூலமாக திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. 
  • இந்த பணத்தைக் கொண்டு நீண்ட கால முதலீடுகள் மற்றும் சேமிப்பைத் தொடங்குவீர்கள். 
  • பெரிய தொகைகளை பரிவர்த்தனைகள் செய்வதற்கு முன்னர் கவனத்துடன் செயல்பட வேண்டியது நல்லது. 
  • நிலுவையில் உள்ள கடன்களை அடைப்பதற்கு நல்ல நேரம் ஆகும். 
  • தேவையற்ற அல்லது ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நிதி பாதுகாப்பை மேம்படுத்தலாம்.

கல்வி:

  • மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 
  • கவனம் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களின் முயற்சி வெற்றி பெறும். 
  • நேரத்தை வீணடிக்காமல் அட்டவணைப்படி படிப்பதன் மூலம் தேர்வுகளில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். 
  • புதிய விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வீர்கள். இதன் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும்

தொழில் மற்றும் வியாபாரம்:

  • தொழில், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள், இழுபறி விஷயங்கள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். 
  • பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 
  • எதிர்பார்த்த பதவு உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • நிர்வாகத்திடம் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். 
  • தொழில் தொடர்பான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் முன்னேற்றத்தைத் தரும். 
  • வியாபாரத்தில் லாபம் கணிசமாக இருக்கும். இருப்பினும் தொழில் விரிவாக்க முயற்சிகளை தவிர்க்கவும்.

குடும்ப உறவுகள்:

  • குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். 
  • துணைக்கும், உங்களுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் பலப்படும். 
  • குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 
  • குடும்பத்தில் புதிய வரவுகள் அல்லது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. 
  • உடன் பிறந்தவர்கள், ரத்த பந்தங்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். 
  • உறவினர்களிடையே மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 
  • பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பரிகாரம்:

  • இந்த வாரம் தடைகள் நீங்குவதற்கு தினமும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. 
  • வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நிதி சார்ந்த பிரச்சனைகளை குறைக்க உதவும். 
  • ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். 
  • மனதின் உள் குரலுக்கு செவி கொடுப்பது, நேர்மையான எண்ணங்களுடன் இருப்பது ஆகியவை பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Numerology: உங்கள் பெயர் இந்த எழுத்துக்களில் தொடங்குதா? அப்ப நீங்க கண்டிப்பா கோடீஸ்வரரா மாறுவீங்க.!
பலத்தை இழந்த சனி பகவான்.! பிப். 2026 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!