Oct 6 - Oct 12 This Week Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு அறிவே ஆயுதம்!

Published : Oct 06, 2025, 10:18 AM IST
mithuna rasi

சுருக்கம்

இந்த வாரம் மிதுன ராசியினருக்கு புதனின் அருளால் அறிவாற்றல் பெருகும், புதிய திட்டங்களைத் தொடங்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல்நலனில் கவனம் தேவை மற்றும் வார இறுதியில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் அறிவாற்றல் உச்சமடையும்

மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் அறிவாற்றல் உச்சமடையும். புதன் பகவானின் அருளால், புதிய யோசனைகள் உங்கள் மனதில் தோன்றும். சூரியனின் இடம்பெயர்வு உங்கள் ஏழாவது இல்லத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். தொடக்க நாட்களில் சிறு குழப்பங்கள் இருந்தாலும், வியாழனன்று முதல் அனைத்தும் சீரடையும். 

இந்த வாரம் நீங்கள் புதிய திட்டங்களை தொடங்கலாம். வணிகத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சனிக்கிழமைக்குப் பின் முடிவுகளை விரைவாக எடுக்காதீர்கள். சிறு தாமதம் நல்லதாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். ஆனால் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்கள் சிறு பரிசு கொடுத்தால் உறவு வலுப்பெடும். திருமணமாகாதவர்களுக்கு, இந்த வாரம் பழைய நண்பர்கள் மூலம் காதல் வாய்ப்புகள் தோன்றும். நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள், அது உங்கள் மனதை புத்துணர்ச்சி அளிக்கும். 

உடல்நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற சிறு பிரச்சினைகள் வரலாம், குறிப்பாக திங்கள் மற்றும் ஞாயிற்று கிழமை பாதுகாப்பாக இருக்கவும். உணவில் பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மன அழுத்தத்தை தவிர்க்க, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யுங்கள். கண் அல்லது காது பிரச்சினைகள் உள்ளவர்கள் சோதனை செய்யுங்கள். 

மாணவர்களுக்கு சவாலான ஆனால் வெற்றிகரமான வாரம். படிப்பில் கவனம் செலுத்தினால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆன்மீக ரீதியாக, புதன் கிழமை விநாயகர் கோயிலில் பூஜை செய்யுங்கள். இது உங்கள் முடிவெடுக்கும் திறனை வலுப்படுத்தும். முழு வாரமும் உங்கள் திறமைகளை பயன்படுத்தி முன்னேறுங்கள்; வெற்றி உங்கள் வாசலில் காத்திருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

18 வருடங்கள் கழித்து கும்ப ராசியில் அங்காரக யோகம்.! 3 ராசிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடப்போகுது.!
2026 ஆம் ஆண்டு முதல் தொழிலில் உச்சம் தொடப்போகும் 5 ராசிகள்.! அம்பானியாகப் போறீங்க.! உங்க ராசி இருக்கா?