Oct 11 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும்.! செல்வம் குவியும்.!

Published : Oct 10, 2025, 04:52 PM IST
Meena Rasi

சுருக்கம்

Today Rasi Palan: அக்டோபர் 11, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். 
  • அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். 
  • உங்கள் அறிவையும், விவேகத்தையும் பயன்படுத்தி சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 
  • இன்றைய தினம் உங்களிடம் பணிவு, நேர்மை, ஒழுக்கம் போன்ற குணங்கள் மேலோங்கி இருக்கும். 
  • அதிகப்படியாக சிந்தனை செய்வதை தவிர்த்து, அமைதியாக செயல்படுவது முன்னேற்றத்தைத் தரும்.

நிதி நிலைமை:

  • இன்று நிதி நிலைமை நிலையாக காணப்படும். 
  • ஆபத்தான முதலீடுகள் அல்லது புதிய பெரிய திட்டங்களை தொடங்குவதைத் தவிர்க்கவும். 
  • முந்தைய முதலீடுகள் அல்லது வேலைகளுக்கான பலன்கள் எதிர்பாராத விதமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • வருங்காலத்திற்கான சேமிப்பு மற்றும் பட்ஜெட் திட்டமிடலுக்கு இந்த நாள் மிகவும் உகந்தது. 
  • இன்றைய தினம் நடைமுறை சிந்தனையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • இன்று குடும்பத்தில் இணக்கமான சூழல் காணப்படும். குறிப்பாக உடன் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நல்லிணக்கம் ஏற்படும். 
  • அன்பான முறையில் பேசிய பிரச்சனைகளை சரி செய்வீர்கள். 
  • நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுவது பிணைப்பை அதிகரிக்க உதவும். 
  • சிறு அன்பான செயல்கள் மூலம் உறவை வலுப்படுத்துவீர்கள். 
  • மனதை அமைதி படுத்த தியானம் அல்லது ஆன்மீக சடங்குகள் துணை புரியும்.

பரிகாரங்கள்:

  • மீன ராசிக்கு அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. 
  • மன அமைதி மற்றும் செல்வம் பெருகுவதற்கு மகாலட்சுமி தாயார் அல்லது விஷ்ணுவை வழிபடலாம். 
  • கோவிலில் உளுத்தம் பருப்பு தானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். 
  • உங்களால் முடிந்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது சிறந்தது.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gajakesari Rajayoga 2026: குரு சந்திரன் தரும் மகாயோகம்.! குபேர யோகம் பெறப்போகும் ராசிகள்.! ஜனவரி முதல் வாரமே ஜாக்பாட்.!
ஜனவரியில் உருவாகும் 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!