Meena Rasi Palan Dec 12: மீன ராசி நேயர்களே, இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.! சரியா பயன்படுத்திக்கோங்க.!

Published : Dec 11, 2025, 04:33 PM IST
Meena Rasi Today Rasi Palan

சுருக்கம்

Dec 12 Meena Rasi Palan: டிசம்பர் 12, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 12, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் பேச்சுத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இன்றைய நாள் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிறிய உடல்நலக்குறைவுகள் வந்து நீங்கும்.

நிதி நிலைமை:

முதலீடுகள் மூலம் சிறிய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய வருமானத்திற்கான வழிகள் குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத் தேவைகள் அல்லது ஆடம்பரப் பொருட்களுக்காக செலவுகள் அதிகரிக்கலாம். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். நிதி விஷயங்களில் மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை தவிர்க்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, இணக்கமான சூழல் நிலவும். உங்கள் பேச்சாற்றல் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள். துணையுடன் உணர்வுபூர்வமான பிணைப்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்னோன்யம் கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

பரிகாரங்கள்:

இன்று முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. கல்விக்கு உதவும் வகையில் ஏழைக் குழந்தைகளுக்கு பென்சில், நோட்டு, புத்தகம் போன்றவற்றை வாங்கித் தரலாம். மஞ்சள் நிற பூ அல்லது இனிப்பை பெருமாளுக்கு சமர்பிப்பது நல்லது.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Marriage Horoscope 2026: 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பா திருமணம் நடக்கும்.! 90'ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.!
ஒரே ராசியில் இணையும் மும்மூர்த்திகள்.! திரிகிரக யோகத்தால் தை முதல் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்.!