Thulam Rasi Palan Dec 11: துலாம் ராசி நேயர்களே, உங்கள் கஷ்டம் எல்லாம் இன்று தீரப்போகுது.!

Published : Dec 10, 2025, 05:14 PM IST
Thulam Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 11 Thulam Rasi Palan : டிசம்பர் 11, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 11, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கவனத்தை சிதற விடாமல் இலக்குகளை நோக்கி பயணம் செய்யுங்கள். சில சமயங்களில் மனதில் ஒரு வித குழப்பம் அல்லது தெளிவின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம்.

நிதி நிலைமை:

நிதி விஷயங்கள் இந்த வாரம் சமநிலையுடன் இருக்கும். வருமானம் மற்றும் செலவுகளை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்து பயனுள்ள மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம். பட்ஜெட்டை திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்றைய தினம் உறவில் இணக்கம் காணப்படும். உங்கள் மனநிலை மகிழ்ச்சி அடையும். வீட்டில் இணக்கமான சூழல் நிலவும். வயதில் மூத்தவர்களின் ஆசிகள் வழிகாட்டுதலைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பேண வேண்டியது அவசியம்.

பரிகாரங்கள்:

இன்று சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நல்லது. சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கற்கண்டு நைவேதியம் படைத்து துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். அந்த கற்கண்டை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுங்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Viruchiga Rasi Palan Dec 11: விருச்சிக ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் சுப கிரகங்கள்.! அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!
Dhanusu Rasi Palan Dec 11: தனுசு ராசி நேயர்களே, குரு பகவான் அருளால் இன்று சகல நன்மைகளுக்கும் கிடைக்கும்.!