Oct 03 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே.. இன்று நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி உங்களுக்கு தான்.!

Published : Oct 02, 2025, 04:32 PM IST
kumba rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 03, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்று உங்கள் கடமைகளை நேர்த்தியான முறையில் செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த செயலை தொடங்கும் முன்னரும் நன்றாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கவனம் தேவை.

நிதி நிலைமை:

இன்றைய தினம் புதிய முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த பணம் சார்ந்த விஷயங்களையும் செய்யக்கூடாது. வருமானம் எதிர்பாராத விதமாக வரக்கூடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தில் அன்பும், பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பேசும்பொழுதும், செயல்படும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. தவறான புரிதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். துணையுடன் உள்ள பிணைப்பை மேம்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பரிகாரங்கள்:

  • மன அமைதி மற்றும் மனோபலம் பெறுவதற்கு கோயில்களில் உள்ள அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள்.
  • அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிரமங்களில் இருந்து விலக உதவும்.
  • வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்வது உகந்தது. 
  • எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Thulam Rasi Palan Dec 13: துலாம் ராசி நேயர்களே, இன்று வாயில் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Viruchiga Rasi Palan Dec 13: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும்.!