கிருஷ்ண ஜெயந்தி 2023 : உங்க வீட்டில் கிருஷ்ணரை இப்படி வழிபடுங்க.. செழிப்பு உண்டாகும்..!!

By Kalai Selvi  |  First Published Sep 4, 2023, 4:47 PM IST

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வீட்டிலிருந்தபடியே வழிபடும் முறை குறித்து இங்கு பார்க்கலாம்.


கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் கொண்டாடப்படும் இந்த விழா கோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. புனிதமானது திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அனுசரிக்கப்படும். தேவகி மற்றும் வசுதேவரின் மகனான கிருஷ்ண பகவான் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று பிறந்தார்.

இந்நாளில், உண்ணாவிரதமும், சிறந்த வாழ்க்கைக்கான பிரார்த்தனைகளும் பகவான் கிருஷ்ணருக்கு அவரது பக்தர்களால் வழங்கப்படுகின்றன. இந்நாளில் கொண்டாட்டம், விஷ்ணுவின் எட்டாவது அவதாரத்தில் தான் கிருஷ்ணர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதமிருந்து கிருஷ்ணரை வழிப்படால் அவர்களுக்கு கிருஷ்ணரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தம்பதிகள் விரதமிருந்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, வீட்டில் இருந்தபடியே கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

வீட்டில் இருந்தபடியே கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபடும் முறைகள் இதோ:

  • கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு, மா இலையில் தோரணங்கள் கட்டி, பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்கரிக்க வேண்டும்.
  • அதுபோல் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை காலை நேரத்தில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்தது. ஏனெனில் புராணங்கள் படி, கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தாதாக கூறப்படுகிறது.
  • மேலும் அந்நாள் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் தொடங்கிய  பூஜையை இரவு முழுவதும் செய்து மறுநாள் காலையில் தான் நிறைவு செய்ய வேண்டும். பின் கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்தவற்றை நீங்கள் சாப்பிட்டு பூஜையை நிறைவு செய்யலாம்.
  • பின் அரிசிமாவை கொண்டு குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருஷ்ணரை நம் வீட்டிற்கு அழைப்பதாக  நம்பிக்கை.
  • உங்கள் வீட்டில் கிருஷ்ணரின் சிலை அல்லது படம் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
  • அதுபோல் அந்நாளில் பூஜை செய்யும் போது நெய்வேத்தியமாக கிருஷ்ணருக்கு பிடித்தவையே இருக்க வேண்டும். உதாரணமாக, வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை, அதிரசம் போன்றவற்றை படைக்க வேண்டும்.
  • கிருஷ்ண ஜெயந்தி அன்று பலர் உணவு மற்றும் தண்ணீர் கூட சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். வேறு சிலரோ உணவுக்கு பதிலாக பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். பொவாகவே நீங்கள் அந்நாளில் விரதம் இருக்கும் போது உங்கள் உடலை வருத்திக் கொள்ளாமல் கஞ்சி, பழங்கள் அல்லது உலர்பழங்களை
  • போன்றவைகளை சாப்பிடலாம். 
  • நீங்கள் அந்நாளில் உண்ணாவிரதம் இருக்கும் போது, பிறருக்கு அன்னதானம் செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும், செழிப்பு கிடைக்கும்.
  • கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் மறக்காமல் வழிபடுங்கள். ஏனெனில் அது மிகவும் மகிமை வாய்ந்தது.
  • குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருக்கும் போது பசுக்களுக்கு உணவளிக்க வேண்டும். இது  உன்னதமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பசு கிருஷ்ணருக்கு மிகவும் நெருக்கமானது.
click me!