கிருஷ்ண ஜெயந்தி 2023: தேதி, பூஜை மற்றும் விரத நேரங்கள் இதோ..!!

By Kalai Selvi  |  First Published Sep 4, 2023, 2:25 PM IST

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது.


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷத்தின் எட்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. அவரது பக்தர்கள் ஆண்டு முழுவதும் ஜென்மாஷ்டமியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நாளில் ஒரு விரதம் அனுசரிக்கப்படுகிறது மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இரவில் கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்றும், அது ரோகிணி நட்சத்திரம் மற்றும் அஷ்டமி திதி என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியின் தேதி, பூஜை நேரங்கள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்தி 2023:
இந்த ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6, புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடையும்.

Latest Videos

undefined

2023 கிருஷ்ண ஜெயந்தி அன்று ரோகிணி நட்சத்திரத்தின் நேரங்கள்:

இந்த ஆண்டு, கிருஷ்ண ஜெயந்திக்கான ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. 

இதையும் படிங்க:  கிருஷ்ண ஜெயந்தி விரத விதிகள் 2023: கிருஷ்ணருக்கு விரதம் இருந்தால் 'இந்த' 6 விஷயங்களை ஒருபோதும் செய்யாதீங்க..!!

பூஜை முகூர்த்தம்:
ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட உகந்த நேரம் செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 11:57 மணிக்கு தொடங்குகிறது. கிருஷ்ணரை வழிபடும் நேரம் நள்ளிரவு 12.42 வரை இருக்கும்.

2023 கிருஷ்ண ஜெயந்தி அன்று 2 நல்ல யோகம்:

  • இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி 2 நல்ல யோகத்தில் கொண்டாடப்படுகிறது. அவை ரவியோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம்.
  • கிருஷ்ண ஜெயந்தியன்று சர்வார்த்த சித்தி யோகம் நாள் முழுவதும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றப் போகிறது. இந்த யோகத்தில் நீங்கள் செய்யும் சுப காரியங்கள் வெற்றியடையும். 
  • ரவியோகம் காலை 6:01 மணிக்கு தொடங்கி 9:20 வரை நீடிக்கும். இந்த யோகத்தில் சூரிய பகவானை வழிபடுவது மிகவும் பலன் தருவதாக கருதப்படுகிறது.

விரத நேரம் 2023:
ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாளுக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் ஜென்மாஷ்டமியின் பரண் இரவு 12:42 மணிக்குப் பிறகு செய்யலாம். அடுத்த நாள் சூரிய உதயத்திற்குப் பிறகு உங்கள் இடத்தில் ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டால், செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 6:02 மணிக்குக் கொண்டாடலாம்.

இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி அன்று 'இந்த' பொருட்களை உங்க வீட்டில் வையுங்க...வீட்டில் ஒருபோதும் குறைவு இருக்காது..!!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம்:
கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபடுவது கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். அதாவது, குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடலாம்.

click me!