குரு வக்ர பெயர்ச்சி 2023 : எந்தெந்த ராசிகளுக்கு ஜாக்பாட்? கோடீஸ்வர யோகம் யாருக்கு?

By Ramya s  |  First Published Aug 22, 2023, 11:32 AM IST

குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல அற்புதமான மாற்றங்களை பெற போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.


ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறும் போது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் இந்த கிரகங்கள் பின்னோக்கி செல்கின்றன. அப்படி கிரகங்கள் பின்னோக்கி செல்லும் போது அது வக்ர காலம் என்று அழைக்கப்படுகிரது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 22 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான், செப்டம்பர் 4-ம் தேதி காலை 9.15 மணி மேஷ ராயிலேயே பெயர்ச்சி அடைகிறார்.

டிசம்பர் மாதம் வரை இந்த குரு வக்ர காலம் இருக்கும். பின்னர் டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். நவ கிரகங்களில் முதன்மை கிரகமாகவும், சுப கிரகமாகவும் குருபகவான் கருதப்படுகிறார். யோகங்களை வழங்குவதிலும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். அந்த வகையில், இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல அற்புதமான மாற்றங்களை பெற போகின்றனர். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

மேஷம் :

ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குருபகவான் வக்ரமடைவதால் தொட்டது எல்லாமே கைக்கூடும். கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்ற சூழல் மாறும். கடந்த காலங்களில் இருந்த வீண் விரையம், வருமான தடை நீங்கும். இனி வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு இருக்கும். எல்லா கனவுகளும் நனவாகும் அற்புத காலம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆண் பிள்ளை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

ரிஷபம் :

குரு பகவான் ரிஷப ராசியின் 12-ம் இடமான விரையம், மோட்சம் வெளிநாட்டு பயணம், சொந்த வீடு, துக்கம் போகம் காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். ரிஷப ராசியில் குருவின் பார்வை 4-ம் வீட்டை பார்க்கிறார். எனவே ரிஷப ராசிக்காரர்கள் வீடு, வாகனம் யோகம் வரும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் விரிவடையும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். நன்றாக பணம் சம்பாதித்து அசையா சொத்துக்களை வாங்கி குவிக்கும் நேரம். எவ்வளவு பணம் வந்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற நிலை மாறி, பணத்தை சேமிக்க முடியும்.

துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றும் ஜோதிட பரிகாரங்கள் இங்கே...இனி நீங்க தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்..

மிதுனம் :

லாப ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான், தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை வழங்கப் போகிறார். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும். திருமணம் ஆகி குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தலைமை பொறுப்புகள் கூட தேடி வரலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும்.

கடகம் :

பத்தாம் வீட்டில் குரு 2,4,6 ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், புதிதாக வீடு கட்டி குடியேறலாம். புது முயற்சிகள் கை கூடும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். வர வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். சட்ட ரீதியாக வெற்றி கிடைக்கும்.

click me!