இந்த குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம். கன்னி ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத கஷ்டம் பட்டிருப்பார்கள். வேலை இல்லாத, வருமானம் இல்லாத நிலை இருந்திருக்கும். வேலை இருந்தால் சம்பளம் இல்லை, அப்படியே சம்பளம் இருந்தாலும் 10 நாட்களுக்கு தான் சம்பளம் இருந்திருக்கும் மீதம் 20 நாட்களுக்கு செலவுக்கு காசு இல்லாமல் சிரமப்பட்டிருப்பீர்கள். கடன் பிரச்சனை, சொத்துக்களை இழந்தது என பல பிரச்சனைகளை பார்த்திருப்பீர்கள்.
Guru Peyarchi Palan Simmam : குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
உடல் ஆரோக்கியத்திலும் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். காதல் வாழ்க்கை, திருமன வாழ்க்கையில் மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி மாறப் போகிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு இருந்தார். அவர் தற்போது 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது. பணம் கொட்டப் போகிறது.
இந்த நேரத்தில் நீங்கள் தொழில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வீடு, நிலம், சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். இனி கெட்டதெல்லாம் விலகும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் வந்துவிட்டது.
Kadaga Rasi Gurupeyarchi Palan 2024 : கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?
எனினும் இந்த காலக்கட்டத்தில் உங்களின் கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச வேண்டாம். வீண் சண்டைக்கு செல்ல வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே கவனமாக யோசித்து பேசுவது நல்லது. பிள்ளையார்பட்டி கோயிலுக்கு செல்வதால் பல பயன்கள் கிடைக்கும்.