Guru Peyarchi Palan Simmam : குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

By Asianet TamilFirst Published Apr 11, 2024, 1:30 PM IST
Highlights

இந்த குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.

Mithuna Rasi Gurupeyarchi Palan 2024 : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டப்போகிறது. குரு உங்கள் ராசிக்கு 2,4,6 இடங்களை பார்க்கிறார். இதனால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்றே சொல்ல வேண்டும். உங்களிடம் கடன் வாங்கி தராமல் இழுத்தடித்தவர்கள் கூட உடனே கொடுத்து விடுவார்கள். தொழிலில் திடீர் யோகங்கள் கிடைக்கும். மாத ஊதியம் பெறுவோருக்கு திடீரென 2 அல்லது 3 மடங்கு சம்பளம் உயரும்.

இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மன குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தை உடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் சரியாகும். உங்கள் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். 

Kadaga Rasi Gurupeyarchi Palan 2024 : கடக ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

ஆனால் குரு 10-ம் இடத்தில் இருப்பதால் அரசியல்வாதிகள் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பதவி பறி போகும் ஆபத்து உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது. பிரச்சனைகள் இருக்கும் இடத்தை வாங்குவதை தவிர்க்கவும். நீங்கள் ஏமாற்றமடையும் வாய்ப்புகள் உள்ளதால் எதையும் தீர யோசித்து செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். 

click me!