Mithuna Rasi Gurupeyarchi Palan 2024 : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

By Asianet Tamil  |  First Published Apr 6, 2024, 10:09 AM IST

இந்த குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.


ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு நிச்சயம் பண வரவு அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் பணம் வந்து சேரும்.. எதிர்பார்த்து இருந்த இடங்களில் பண வரும். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும்.

நீண்ட காலமாக உங்களிடம் பணம் வாங்கி பணத்தை திருப்பி தராதவர்கள், நீங்கள் கேட்காமலே பணத்தை கொடுப்பார்கள். இதனால் வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் கையில் இருக்காது. அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும். எனவே இதனை சுப செலவுகளாக மாற்றலாம். மேலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் வர உள்ளதால் நிச்சயம் சுப செலவுகள் அதிகரிக்கும்.

Rishaba Rasi Gurupeyarchi Palan 2024 : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

மேலும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிகள் 4, 6, 8 ஆகிய இடங்களில் வீடு, நிலம், சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய வாகனங்களையும் சிலர் வாங்கலாம். எனினும் இந்த குரு பெயர்ச்சி காலக்கத்தில் நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

முதலீடுகள் செய்யும் போதும் கவனமாக செய்வது முக்கியம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளை செய்யாமல், ஒருமுறைக்கு 2 முறை யோசித்த பின் முதலீடு செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்வது நல்லது அல்லது சுப செலவுகளாக மாற்றுவது நல்லது.

Guru Peyarchi 2024 : குபேர யோகம் அடிக்கப் போகுது.. இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..

மே 13, 2025 வரை திருமணம் கைகூடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். அதே போல் ஏற்கனவே திருமணமானவர்களின் மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே உறவு மோசமாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி ஆகியவற்றை வழங்கும் அதே நேரத்தில் ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். 

click me!