இந்த குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
Mithuna Rasi Gurupeyarchi Palan 2024 : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?
இந்த குருபெயர்ச்சி கடக ராசிக்கு பல நல்ல பலன்களையே கொடுக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை அடையப் போகிறீர்கள். இவ்வளவு ஆண்டுகள் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கும் வேலையில் நிம்மதி இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது.
ஆம் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கப்போகிறது. பல நல்ல வேலைவாய்ப்புகள் உங்கள் வீடு தேட்டி வரும். சிலருக்கு அரசு வேலை கூட கிடைக்கும் யோகம் உள்ளது.. சிலருக்கு ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும்.
அதே போல் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு குடல் பிரச்சனை, சிறுநீர்க பிரச்சனை போன்ற பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் இனி அந்த பிரச்சனைகள் வராது. ஆரோக்கியத்தை பொறுத்த வரை சிறப்பாகவே இருக்கும்.
Rishaba Rasi Gurupeyarchi Palan 2024 : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?
உங்களின் பணக்கஷ்டம் மாறி, பொருளாதாரம் முன்னேறும். தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது. உங்களுக்கு அதே நேரம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம்.. தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.
அதிகமாக பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட வேண்டாம். யாரையும் பற்றி தவறாக பேச வேண்டாம். பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நாவை அடக்கிக்கொள்வது நல்லது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகலாம்.