
தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் குருவின் பார்வை இருப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஆண்டின் இறுதி நாள் உங்களுக்கு உற்சாகத்தையும், புதிய திட்டங்களை உருவாக்கும் நாளாக அமையும். தடைபட்டு நின்ற காரியங்கள் வேகம் எடுக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புதிய முதலீடுகள் செய்ய சாதகமான சூழல் நிலவுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப செய்திகள் வந்து சேரும். மன அழுத்தம் குறையும். சனி பகவானின் தாக்கத்தால் முதுகு அல்லது கால் வலி போன்ற சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கலாம். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தும் மாணவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.
லட்சுமி நாராயணரை வழிபடுவது பொருளாதார உயர்வைத் தரும். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள். ‘ஓம் நமோ நாராயாணா’ 108 முறை ஜெபிக்கவும். வயதானவர்கள்_ ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் செய்வது சிறந்தது.
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.