
கும்ப ராசி நேயர்களே, ஆண்டின் இறுதி நாளான இன்று கலவையான பலன்களே கிடைக்கும். ராகு பகவானின் நிலை காரணமாக குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முயல்வீர்கள். சூரிய பகவானின் நிலை காரணமாக கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
சனி பகவானின் நிலை காரணமாக இன்று வரவை விட செலவுகள் அதிகரிக்கலாம். திடீர் மருத்துவ செலவுகள் அல்லது பயணச் செலவுகள் ஏற்படலாம். முதலீடுகளில் அதிக கவனம் தேவை. பெரிய தொகையை யாருக்கும் கடனாகத் தர வேண்டாம். லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாக வாய்ப்பு உள்ளது.
இன்று கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்த செல்வது நல்லது. பேசும் பொழுது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும். ஆரோக்கியத்தில் சிறு சோர்வு அல்லது அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம்.
சனி பகவானின் தாக்கத்தை குறைக்க அனுமனை வழிபடுவது சிறந்தது. மனக்குழப்பம் நீங்க துர்க்கை அம்மனை வழிபடலாம். எறும்புகளுக்கு சர்க்கரை அல்லது தானியம் வழங்குவது நற்பலன்களை தரும்.
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.