This Week Rasi Palan: மகர ராசி நேயர்களே, இந்த வாரம் வரப்போகும் குட் நியூஸ்.! அதிர்ஷ்ட காற்று வீசும்.!

Published : Dec 15, 2025, 04:28 PM IST
magara rasi

சுருக்கம்

Magara Rasi This Week Rasi Palan: டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - மகரம்

மகர ராசி நேயர்களே, இந்த வாரம் சுக்கிர பகவானின் சாதகமான நிலை காரணமாக உற்சாகத்துடனும், பொலிவுடன் காணப்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 12-ஆம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக மனதளவில் குழப்பங்கள் ஏற்படலாம். ராகு மற்றும் செவ்வாயின் நிலை காரணமாக தைரியமும், ஆற்றலும் அதிகமாக இருக்கும். குருவின் பார்வையால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். விரய ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் அல்லது வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனி பகவானின் நிலை காரணமாக பணத்தை சேமிப்பதில் அழுத்தத்தை உணரலாம். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்க்கவும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் முழுவதும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தூக்கமின்மை அல்லது கண்களில் சில தொந்தரவுகள் ஏற்படலாம். மனம் அலைபாய்தல் அல்லது அதிக சிந்தனைகளால் மனச்சோர்வு ஏற்படலாம். துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வீட்டு உணவுகளை உட்கொள்வது நல்லது.

கல்வி:

இந்த வாரம் படிப்பில் கவனம் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கூடுதல் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்க முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படலாம். கவனத்துடன் படிப்பவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கலாம். ஆராய்ச்சி தொடர்பாக படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வாய்ப்புகள் வரலாம். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். வேலை முயற்சிகளுக்கு சாதகமான வாரமாகும். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இலக்குகளை அடையத் தேவையான துணிச்சல் கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது எச்சரிக்கை தேவை.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்ப உறவில் அமைதியும், அன்னியோன்யமும் அதிகரிக்கும். சனி பகவானின் நிலை காரணமாக பேசும் பொழுது நிதானமாக பேசவும். தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே நிதானத்துடன் அணுகுவது நல்லது. தாயார் வழி உறவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் தேவைப்படலாம்.

பரிகாரம்:

தினமும் காலையில் வீட்டில் விளக்கேற்றி கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது மகாலட்சுமி துதி செய்வது நல்லது. ஆஞ்சநேயர் அல்லது சிவபெருமானை வணங்கி வர நிதி நிலைமை சீராகும். ஏழை எளியவர்களுக்கு மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்வது, மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவுவது ஆகியவை நன்மைகளை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, சூரியன் அருளால் பிரச்சனைகள் எல்லாம் தவிடு பொடியாகும்.!
This Week Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, அடித்து ஆடப்போகும் விருச்சிக ராசி.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.!