2024-ம் ஆண்டு முடிவடைவதற்கு உலகளவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று நடிகர் அனு மோகன தெரிவித்துள்ளார்.
1980களில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான்வர் அனு மோகன். இவர், இது ஒரு தொடர்கதை, நினைவுச்சின்னம், மேட்டுப்பட்டு மிராசு, அண்ணண் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். பின்னர் பல படங்களில் நடிக்கவும் செய்தார். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், பாட்டாளி, படையப்பா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கொங்கு தமிழில் பேசும் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அண்மை காலமாக நடிகர் அனுமோகன் சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கணித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 2024-ம் ஆண்டு முடிவடைவதற்கு உலகளவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். பிரபல் யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் அவர் இந்த ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
மார்கழி மாதத்தில் திருமணங்கள் செய்யக்கூடாது என்று சொல்லுவது ஏன்...? அப்படி செய்தால் என்ன நடக்கும்..?
மேலும் பேசிய 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் கடல் பொங்கும், பூமி பிளக்கும். பயங்கர காற்று வீசும். பல பேரழிவுகள். பஞ்ச பூதங்களின் செயல்பாடு ஒன்றாக இணைந்து மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த உலகமும் இதனால் பாதிக்கப்படும். ராவண பூமி அதாவது இலங்கை தீவு கடலில் மூழ்கும் என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் தென்கிழக்கு பகுதி அழிவை சந்திக்கும். இயற்கையின் சீற்றத்தை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. அது நடந்தே தீரும். எனவே 2024-ல் பஞ்ச பூதங்கள் தொடர்பான அழிவு நிச்சயம். இந்த பேரழிவுக்கான அறிகுறிகள் 2023-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. மனிதர்கள் மிருக நிலைக்கு சென்றுவிட்டனர். அவர்களின் மனிதநேயம் இல்லாம்ல் போய்விட்டது.
எனவே மக்களின் எண்ணங்களும், செயல்களும் தவறாக போய் கொண்டிருப்பதால் இதற்கெல்லாம் இயற்கை தண்டனை கொடுக்கும். அப்போது பேரழிவு ஏற்படும். அப்படிப்பட்ட பேரழிவு 2024-ல் ஏற்படும். நிலப்பரப்பு நீர்பரப்பாகவும், நீர் பரப்பு நில பரப்பாகவும் மாறும். இது சித்தர்களின் வாக்கு. நான் யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இறுதிச் சடங்குகளை மகன் மட்டும் செய்வது ஏன் தெரியுமா..? உண்மை இதுதாங்க!
விவிஐபி என்று அழைக்கப்படும் பெருந்தலைகளை நாடு இழக்கும். அவர் அரசியல்வாதி, கலைத்துறை, மருத்துவம், விஞ்ஞானம் எந்த துறையை சேர்ந்த புகழ்பெற்ற நபராக இருக்கலாம். இந்தியாவில் இந்த இழப்பு ஏற்படும். என்ன தான் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பஞ்ச பூதங்களுக்கு நாம் என்றுமே அடிமை தான். பஞ்ச பூதங்கள் பொங்கி எழுந்தால் உலகமே அழிந்துவிடும்..” என்று தெரிவித்தார்.