உங்களுக்கு ஆர்வம், ஆச்சரியமூட்டக் கூடிய சில வித்தியாசமான தோட்டக்கலை டிப்ஸ்…

 |  First Published May 17, 2017, 11:52 AM IST
Youre curious some amazing gardening tips ...



தோட்டம் வைத்துப் பராமரிப்பது உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும். ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கும் கூட.

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய, உங்களுக்கு ஆச்சரியமூட்டக் கூடிய பலனைத் தரும் பல வித்தியாசமான தோட்டக்கலை விவரங்கள்.

Tap to resize

Latest Videos

முள் கரண்டிகள்

உங்கள் வீட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகள் உங்கள் தோட்டத்தை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் உழைப்பு வீணாக நேரிடுகிறது. ஆனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் ஆன முள் கரண்டிகள் அல்லது ஸ்பூன்களை ஆங்காங்கே தோட்டத்தில் நட்டு வையுங்கள். இந்த ஒரு எளிமையான ஐடியா அவற்றை தள்ளி இருக்கச் செய்து தோட்டத்தை பாதுகாக்கும்.

பால் பவுடர்

கொஞ்சம் ஓவராத்தான் தெரியும். ஆனால், தக்காளிக்கு இது பெரிதளவில் ஊட்டச்சத்தாக இருப்பதாகப் பலர் கூறுகின்றனர். பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம் ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும். முயன்று பார்த்து இனிமையான தக்காளிகளைப் பெறுங்களேன். இந்த குறிப்புகள் மிகவும் பலன் தரக்கூடியவை.

முட்டை ஓடு

முட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தோட்டத்தை செழுமையாக்க உதவும். உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகள் ஒரு நல்ல உரமாக செயல்படும். அவற்றை குப்பையில் தூக்கி எறியாமல் நொறுக்கி மண்ணில் கலந்து விடுங்கள். ஏன் நீங்கள் விதைகளைக் கூட முட்டை ஓடுகளில் விதைத்து வளர்க்கலாம். உங்கள் விதைக்கு அது ஒரு சிறந்த சத்துமிக்க தொட்டியாக அது இருக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.

டயபர்கள்

இவை நன்கு ஈரத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளக்கூடியவை. ஆனால் இது தாவரத்திற்கு உதவும் என எப்போதாவது நினைத்ததுண்டா? டயபர் உரையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும். ஆனால் இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.

click me!