சீமைக் கருவேல மரத்தை வெட்டியாச்சு; இப்போ அந்த இடத்தில எந்த மரத்தை நடலாம்…

 
Published : May 17, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
சீமைக் கருவேல மரத்தை வெட்டியாச்சு; இப்போ அந்த இடத்தில எந்த மரத்தை நடலாம்…

சுருக்கம்

Cut the tree of the zucchini tree Now you can plant any tree in that place ...

தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் சீமை கருவேல மரம் தான் என்று அதனை அழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது.

சீமை கருவேல மரம் வறட்சியையும் தாங்க கூடியது. அதோடு மக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது.

சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும் மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்தாவரமுமான ”மஞ்சநெத்தி” எனப்படும் நுணா  என்னும் வகை மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர்.

மஞ்சநெத்தி பயன்கள்

இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்கள் விதையிட்டு வளர்க்கப்படுவதில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.

இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.

இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமி நாசினியாக செயல்படும். 

அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.  பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது.

மருத்துவக் குணம்வாய்ந்தது. 

இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும். 

இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!