மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பில் ஊசி ஈ என்ற ஒரு வகைப் பூச்சியின் தாக்குதலால் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.
ஒவ்வொரு 100 முட்டை (ஒரு குவியல்) எண்ணிக்கை கொண்ட புழு வளர்ப்பிற்கும் சராசரியாக 10 கிலோ வரை பட்டுக்கூடு மகசூல் இழப்பு உண்டாகிறது.
undefined
பட்டுப்புழுவைத் தாக்கும் ஊசி ஈயினைக் கட்டுப்படுத்தும் முறைகள்
1.. ஊசி ஈயினால் தாக்கப்பட்ட பட்டுப்புழுக்கள், கீழே விழுந்த ஊசிப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
2.. ஊசி ஈயினால் துளைக்கப்பட்ட பட்டுக்கூடுகளை பிரித்தெடுத்து அவற்றை பட்டுக்கூடுகளின் கழிவுகளோடு சேர்த்து எரித்துவிடவேண்டும்.
3.. பட்டுப்புழுக்களின் வளர்ப்பறையில் சுவர் ஓரங்களில் துளைகள் இல்லாமல் பாதுகாக்கவேண்டும்.
4.. ஊசி ஈக்கள் வளர்ப்பறையனுள் நுழைவதை தடுக்க வளர்ப்பறையின் சன்னல் மற்றும் கதவுகளில் வலை அடிக்க வேண்டும். இதனால் ஊசி ஈக்கள் கூட்டுப்புழுக்கள் ஆகாமல் தடுக்க முடியும்.
5.. ஊசி ஈக்கள் முட்டை இடுவதைத் தடுக்க வளர்ப்புத் தட்டுக்களின் மேல் நைலான் வலைகொண்டு மூடவேண்டும்.
6.. பட்டுப்புழுக்களின் கூடுகளை துணிப்பைகளில் எடுத்துச்செல்ல வேண்டும்.
7.. பட்டுப்புழுக்களின் கூடுகளை எடுத்துச் செல்லுமுன் ஊசி ஈயினால் துளைக்கப்பட்ட பட்டுப்கூடுகளை பிரித்தெடுப்பதன் மூலம் ஊசி ஈக்கள் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
8.. வளர்ப்பறைகளுக்கு முன்னர் ஒரு முன்னறையை அமைப்பது ஊசி ஈ நேரடியாக நுழையாமல் தவிர்க்க உதவும். விவசாயிகளும் ஒரே நேரத்தில் புழு வளர்க்காமல் விடுவது ஊசி பெருக்கத்தை தடுக்க உதவும்.
9.. தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் புழு வளர்க்காமல் விடுவது ஊசி ஈ பெருக்கத்தைத் தடுக்க உதவும்.
10.. உணவுக்கான இலைகளை, தண்டுகளை வளர்ப்பறைக்குள் எடுத்து செல்லும்போது ஊசி ஈ அதனுடன் செல்லாமல் இருக்கக் கவனம் செலுத்தவேண்டும்.
11.. பட்டுக்கூடுகளை அங்காடியில் விற்ற பிறகு அதனை எடுத்துச்சென்ற கோணிப்பைகளை பூச்சி மருந்து கரைசலில் முக்கி எடுக்கவேண்டும்.
12.. பட்டுக்கூடு அறுவடைக்குப் பின் கோழிகளை வளர்ப்பாறைகளில் விடுவது மீதமுள்ள ஊசி புழுக்களையும் அழிக்க உதவும்.
13.. ஊசி ஈயினை கவரும் மாத்திரையை 1 லிட்டர் தண்ணீரில் 2 மாத்திரைகள் வீதம் கரைத்து அந்தக் கரைசலை வளர்ப்பறையினுள் சன்னல் மற்றும் கதவருகே வைத்து தாய் பூச்சியை கவர்ந்து அழிக்கவும். பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்திலிருந்து இந்த முறையைப் பயன்படுத்தவேண்டும். இந்தக் கரைசலை மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றவேண்டும்.
14.. உயிரியல் கட்டுப்பாடு முறையில் ‘நிசோலின்க்ஸ் தைமஸ்’ என்ற ஒட்டுண்ணியினை 100 முட்டைத் தொகுதிகளுக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணிகள் என்ற விகிதத்தில் மாலை நேரங்களில் வெளியிடவும், பீளிச்சிங்பவுடர் மருந்து தெளித்த இரண்டு நாட்கள் கழித்து ஒட்டுண்ணிகள் வளர்ப்பறையில் விடவேண்டும்.
15.. பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்தில் ஊசி ஈ கொல்லி மருந்து தெளிக்கவும், இதனை பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்தின் இரண்டாம் நாளிலும், நான்காம் பருவத்தின் இரண்டாம் நாளிலும், ஐந்தாம் பருவத்தின் இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் நாளிலும் தெளிக்கவும். ஊசி ஈ மருந்து தெளித்து அரைமணி நேரம் கழித்து உணவளிக்கவேண்டும்.