வெள்ளாடுகளை பற்றிய இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்காது? இப்போ தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Jan 18, 2018, 1:34 PM IST
You should know these things about white goats



 

** உலகத்தில் சுமார் 500 மிலியன் வெள்ளாடுகள் உள்ளன. இவற்றில் 41% ஆப்பிரிக்காவிலும், 37% இந்தியத் துணைக் கண்டத்திலும் உள்ளன. இந்த விபரமே ஏழைகளின் பசு வெள்ளாடு என்பதனை விளக்கவில்லையா? அடுத்து ஒரு நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளிலேயே வெள்ளாடுகள் அதிகம் உள்ளன. 

Tap to resize

Latest Videos

** இது, அவற்றை மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமலே வளர்க்க முடியும் என்பதனை விளக்குகின்றது. வெள்ளாடுகள் மாடுகளைப் போன்ற கொம்புகளை உடையதால், அவை மாடுகளின் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். 

** விலங்கியல் பகுப்பின்படி, நமது வெள்ளாடுகள் காப்ராகிர்க்ஸ் (Capra hircus) எனப்படும். செம்மறி ஆடுகள் ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries) எனப்படும். ஆகவே இவை ஒன்றோடொன்று இனச் சேர்க்கையாவதில்லை. 

** வெள்ளாடுகளில் 60 மரபுக் கூறுகள் (Chromosomes) உள்ளன. வெள்ளாடுகளின் பெயரில் சில ஊர்கள் உண்டு. 

** ஒரு மாட்டிற்கு ஆகும் தீவனத்தில் 6-7 வெள்ளாடுகளை வளர்த்து விடலாம்.

** இவற்றை வளர்க்கப் பெரிய வசதியான கொட்டகை தேவையில்லை. மழைக் காலத்தில் வீட்டின் தாழ்வாரங்களிலேயே அவை ஒதுங்கிக் கொள்ளும்.

** ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு நடமாடும் ஆடு, நடமாடும் பணம் போன்றது. நமது நாட்டினருக்கு, மந்தையில் ஆடு முந்தியில் பணம் போன்றது.

** முட்செடிகள் உட்பட எல்லா வகைத் தாவரங்களையும் உண்டு வாழக் கூடியவை. உயர்ந்த மலை, பாறைப் பகுதிகளிலும் ஏறி மேயக் கூடியவை.

** செம்மறி ஆடுகள் போலன்றித் தாமே மேய்ச்சலுக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிவிடும்.

** வெள்ளாடுகளில் நோய்ப் பிரச்சனைகள் குறைவு.

** இறைச்சி, பால், தோல், எரு ஆகிய நான்கு பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளுக்கு அசையக்கூடிய உறுதியான மேல் உதடுகள் உள்ளதால் முட்செடிகளையும் உண்ணும் வல்லமை பெற்றவை. 

** மேலும் நெருங்கிய கூரிய கடினமான பற்கள் உள்ளதால், சிறிய தானியங்களையும், கடினமான விதைகளையும் அரைத்து உண்ணவல்லன.

** பாலை நிலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வாரம் மூன்று முறை நீர் வழங்கினால் போதும். 

click me!