வெள்ளாட்டுப் பாலில் அப்படி என்ன சிறப்புகள் அடங்கியிருக்கு? இதை வாசிங்க தெரியும்...

Asianet News Tamil  
Published : Jan 18, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
வெள்ளாட்டுப் பாலில் அப்படி என்ன சிறப்புகள் அடங்கியிருக்கு? இதை வாசிங்க தெரியும்...

சுருக்கம்

Benefits of white goat milk

 

 வெள்ளாட்டுப் பாலின் சிறப்புகள்

** வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையுடைதால், தாய்பாலுக்கு அடுத்த சிறப்புடையது.

** வெள்ளாட்டுப் பாலின் புரத வேறுபாடு காரணமாக வெள்ளாட்டுப் பாலினால் ஒவ்வாமை (Allergy) ஏற்படுவதில்லை. 

** பல குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கும்போது ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டமும், பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இச்சூழ்நிலையில் வெள்ளாட்டுப் பால் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது.

** வெள்ளாட்டுப்பால் தேவைப்படும்போது குழந்தைகளுக்குக் கறந்து கொடுக்கலாம். வெள்ளாடுகளில் எப்போது வேண்டுமானாலும் பால் கறந்து கொள்ள முடியும்.

** குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் அருமருந்து போன்றது.

** வெள்ளாட்டுப் பாலால் காச நோய்ப் பிரச்சனை கிடையாது. பொதுவாக வெள்ளாடு காச நோயால் தாக்கப்படுவதில்லை.

** வெள்ளாட்டுப்பால் கொழுப்புக் கோளங்கள் சிறியனவாதலால் விரைவில் கெட்டு விடக் கூடியது. ஆகவே விரைந்து பயன்படுத்த வேண்டும். அல்லது காய்ச்சிச் சேமிக்க வேண்டும். 

** மேலும் புருசெல்லோசிஸ் என்னும் நோய்க் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சிக் குடிப்பது நல்லது.

** ஏழைகளின் புரதப் பற்றாக் குறையை வெள்ளாட்டுப் பால் தீர்க்கும் ஒரு கருவியாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்.! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு.. எந்தெந்த மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்?
Uzhavar Sandhai Vegetable Price Today: வெறும் ரூ.10-க்கு கீரை.. ரூ.15-க்கு சுரைக்காய்.. எங்கே தெரியுமா இந்த அதிரடி விலை?