வெள்ளாட்டு பால்:
** வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, நமது வருங்காலப் பால் தேவையை நோக்கினால் பால் உற்பத்திக்குப் பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். நமது பெரிய தேவையை வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது.
** அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பால் உற்பத்தி மூலம் எட்டிவிட முடியாது. அத்துடன் யாவரும் வெள்ளாட்டுப் பாலை விரும்பி ஏற்பதும் இல்லை. ஆனால் வெள்ளாடு ஏழையின் பசு எனக் கருதப்படுகின்றது.
** ஏனெனில், பெரிய பசுவைப் பேண முடியாத ஏழைகள் வெள்ளாடுகளை வளர்க்க முடியும். வீட்டுத் தே¨க்குச் சிறிது வெள்ளாட்டுப் பாலை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேல் நாடுகளில் சிறப்பாக பாலுக்காகவே வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் குழந்தைகளின் செவிலித் தாய் எனப்படுகின்றன.
** ஆட்டுப்பாலில் ஒரு வகை வாடை இருக்கும். இதற்கு முக்கிய காரணம் வெள்ளாட்டுக் கடாக்களை ஆடுகளுடன் சேர்த்து வளர்ப்பதே காரணமாகும்.
** கடா வெளியேற்றும் வாடையை ஆட்டுப்பால் உறிஞ்சிக் கொள்வதால், இவ்வகையான வாடை இருக்கின்றது. கடாக்களைத் தனியாகப் பிரித்து வளர்க்கும் போது இப்பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
எரு
** வெள்ளாட்டுச் சாணம் சிறந்த எருவாகும். மாட்டுச் சாணத்தில் 20%க்கு மேல் எரி பொருளாக எரித்து விடப்படுகின்றது. ஆனால், ஆட்டுச் சாணம் முழுவதும் நிலத்திற்கு எருவாக மாத்திரமே பயன்படுகிறது.
** மேலும், மாட்டுச் சாணத்தை மக்கச் செய்துதான் வயலில் உரமாகப் போட முடியும். ஆனால் ஆட்டுச் சாணம் உடனடியாக எருவாகப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகத் தான் மாட்டுச் சாணம் மறு ஆண்டு. ஆட்டுச் சாணம் அவ்வாண்டு, எனக் குறிப்பிடப்படுகின்றது.
** ஆள்கூழ் முறையில் ஆடுகளை வளர்த்தால், இன்னும் அதிக அளவில் எரு கிடைக்கும்.