வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள்
undefined
** வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.
** வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.
** செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.
** செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.
** வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.
** வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.
** செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.