நீங்களும் ஆகலாம் பிறநாட்டு வாடிக்கையாளர்…

 |  First Published Nov 8, 2016, 6:05 AM IST



வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், சூலக்கரை மேடு, சின்ன தாதம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார்.

சிறுதானியங்களின் உணவுத்தன்மை குறித்து ஆய்வு செய்வதோடு, புதுப்புது உணவு மெனுக்களை உருவாக்கி வரும் சிவக்குமார், தன் அனுபவங்களை கூறியது:

Latest Videos

undefined

தாத்தா சங்கரலிங்கம் இயற்கை விவசாயம் செய்தார். அப்பா சுப்புராஜ் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தார்.
தாத்தாவைப் போலவே எனக்கும் விவசாயத்தில் ஈடுபாடு இருந்தது. தாத்தா நிலம் என் கைக்கு வந்தபோது நெல் விவசாயம் செய்தேன்.

22 ஏக்கரில் 2 ஏக்கர் ஆராய்ச்சிக்கு ஒதுக்கியுள்ளேன். 12 ஏக்கரில் குதிரை வாலி விதைத்தேன்.
இரண்டு ஏக்கரில் கொய்யா உள்ளது. உணவு உற்பத்தியில் நல்லதை கொடுக்க வேண்டும் என்பது நோக்கம்.

சத்து நிறைந்தது என்றாலும் விவசாயிகள் ஏன் குறுந்தானியங்களை கைவிட்டனர்.

இவற்றில் இருந்து கல், மண்ணை பிரித்து, சுத்தமான அரிசியாக்கும் தொழில்நுட்பம் குறைவு. கூழ், கஞ்சியாக மட்டுமே பார்த்து பழகிவிட்டோம்.

இரண்டு குறைகளையும் சரிசெய்தால் சிறு, குறுந்தானியங்கள் விவசாயிகளிடமும், மக்களிடமும் மறுபடியும் சென்று சேரும்.
குதிரைவாலி, தினை, வரகு விதைத்து அறுவடை செய்தேன். இவற்றை சுத்தம் செய்வதற்கான இயந்திரங்களையும் வாங்கினேன்.

இவற்றை படிப்படியாக தோல் நீக்கினால் தானியத்தை ஒட்டியுள்ள மேல்தோல் மட்டும் அப்படியே இருக்கும்.
அதனால் இந்த அரிசி சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும். கடைகளில் விற்பதை போல பாலீஷ் செய்தால் சத்துக்கள் போய்விடும். சத்தான அரிசியை கிலோ ரூ.50 முதல் விற்பனை செய்கிறேன்.
உணவாக விற்பனை: கேழ்வரகு, தினை, குதிரைவாலியில் அல்வா செய்து விற்பனை செய்தேன். சென்னை சட்டசபை வரை இந்த உணவுகள் பிரபலமானது.

கம்பு தானியத்தை கேரளாவில் கொடுத்து அவல் ஆக மாற்றினேன். அடுத்து கம்பு அவல் மிக்ஸர் செய்தேன்.

ஆர்டர் கேட்பவர்களுக்கு சாமை வெஜ் பிரியாணி, வரகு புளியோதரை, பனிவரகு எலுமிச்சை சாதம், தினை தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் செய்து தந்தேன்.
காளான் உற்பத்தி செய்து காளான் இட்லி, காளான் முறுக்கு தயாரித்தேன். வயலோடு வேலை முடிந்ததென நினைத்தால், என்னால் லாபம் ஈட்ட முடியாது.

வியாபாரிகள் கேட்கும் குறைந்தபட்ச விலைக்கு தானியங்களை கொடுக்க நேரிடும். உணவு, தின்பண்டங்கள் செய்வதோடு, மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன்.

அடுத்ததாக சிறுதானிய புழுங்கல் அரிசி தயாரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளேன், என்றார்.

click me!