வயலை ஏர் உழுது நடவு செய்ய வேண்டுமா? இந்தாங்க டிப்ஸ்…

 
Published : Jul 04, 2017, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
வயலை ஏர் உழுது நடவு செய்ய வேண்டுமா? இந்தாங்க டிப்ஸ்…

சுருக்கம்

With these ways you can maintain land

 

1.. வயலை ஏர் உழும்பொழுது கால்நடகைகளை வைத்து ஏர் உழவேண்டும். கால்நடைகளின் கால் குலம்பு படும் மண் இயற்கை ரீதியாக வளமாக அமைகிறது.  கோடையில் சித்திரை மாதத்தில் ஏர் உழுது பண்படுத்திய வயலில் நன்கு விளையும்.

2.. அரசமரத்து இலை, ஆலமரத்த்துஇலை, வேப்பமரத்து இலை, நெல்லிமரத்து இலை, மாமரத்து இலை இவை அனைத்தையும், காய்து உதிர்ந்த தழைகளை சேகரித்து சாகுபடி செய்யும் நிலத்தில் போட்டுவைக்க வேண்டும். 

மழையில் நனைந்து காய்ந்து நிலத்தில் இருந்துகொண்டு நிலத்தை பண்படுத்தி நல்ல விளைச்சலை பெருக்கும். எந்த பூச்சிகளும் நிலத்தில் வளராது.

3.. அரசமரத்து குச்சி, ஆலமரத்துகுச்சி, நெல்லிக்குச்சி, மா குச்சி, பசுஞ்சானம், நெய் இவற்றை விட்டு எரித்த கரியுடன் பசுங்கோமியம் கலந்து பயிருக்கு தெளித்தால் பயிரில் எந்த பூச்சியும் வராது.

4.. கோடையில் கிடைபோடு என்ற பழமொழிக்கேற்ப கோடையில் கால்நடைகள் கிடைபோடவேண்டும்.  கிடைபோடும்போது கால்நடையின் சிறுநீர், சாணம், எச்சில், இவை நிலத்தில் உள்ள கரியமில வாயுவை எடுத்துகொண்டு நன்கு விளையும்.

5.. விதைநெல் சேமித்துவைக்கும் கிடங்கியின் மேலும் பக்கத்திலும் நொச்சி இலை, வேப்ப இலை போட்டு வைத்தால், விதைகளை எந்த பூச்சியும் தாக்காது.

6.. விதை நெல், பயறு வகைகளை அமாவாசையில் காயவைக்க வேண்டும்

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?