துவரை மற்றும் அவரையில் காய் துளைப்பானின் தாக்குதல் அதிகம் இருக்கும். இதற்கு விவசாயிகள் அதிக அளவு இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவர்.
காய்த்துளைப்பான் அதிகமுள்ள பகுதியில் துவரை மற்றும் அவரை பயிரிடுவதைக்கூடத் தவிர்த்துவிடுவர். இந்த முறையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தயாரித்து காய்த்துளைப்பானை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.
தேவையானவை:
சுண்டக்காய் – அரைகிலோ
எட்டிக்காய் – 1 கிலோ
நொச்சி – அரை கிலோ
சோற்றுக்கற்றாலை – அரைகிலோ
பீனாரி சங்கு – அரைகிலோ
வேப்பங்கொட்டை – 1/4 கிலோ
உருகுலா பட்டை – 1/2 கிலோ
ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இக்கலவையை ஒரு மண் பானையில் போட்டு அது மூழ்கும்வரை மாட்டுக் கோமியத்தை ஊற்றவேண்டும்.
இந்த பானையில் வாயை இருக மூடி ஒரு வாரத்திற்கு ஊறல் போடவேண்டும். பின்பு இக்கரைசலை வடிகட்டி 1:10 என்ற விகிதத்தில் நீரை கலந்து தெளித்து காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
காய்த்துளைப்பானின் தாக்குதல் அதிகமிருந்தால் 1:8 என்ற விகிதத்தில் நீரை கலந்து தெளிப்பது நல்லது.