கத்திரி பயிர்களில் அதிக அளவில் பூ பூக்க
கூளாத்திப் பழங்களைக் கொண்டு கத்தரி மற்றும் மிளகாய் பயிரில் பூக்கள் பூப்பதை தூண்டலாம்.
கத்தரி மற்றும் மிளகாய் செடியில் சத்து பற்றாக்குறையால் அதிகமாக பூக்கள் தோன்றுவது இல்லை.
50 – 60 கூளாத்தி பழங்களை 24 மணிநேரம் நீரில் ஊறவைத்து பின்பு அவற்றின் தோலை நீக்கிச் சாறு எடுக்க வேண்டும்.
250 மிலி சாறை 10 லிட்டர் நீரில் கலந்து பயிரின் நிலை மற்றும் பூக்களின் எண்ணிக்கைக்குப் ஏற்ப தெளிக்கலாம்.
பொதுவாக 2 - 3 முறை இந்தக் கலவையை தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பூக்களின் எண்ணிக்கை அதிகமாவதால் மகசூலும் அதிகரிக்கிறது.